எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் இதை நெற்றியில் இட்டுக்கொண்டால் நிச்சயம் வெற்றிதான்.

சிலருக்கு எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும் தடங்கள் இருந்துகொண்டே இருக்கும். எப்படிப்பட்ட இன்னல்கள் வந்தாலும் அதை கூட பொருட்படுத்தாமல், அடுத்தடுத்த முயற்சிகளை செய்து கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு எந்த ஒரு வழிபாட்டையும் முழுமையாக செய்யும் அளவிற்கு பொறுமையும் இருக்காது, நேரமும் இருக்காது. ஆனால் என்ன செய்வது? செய்யும் வேலை மட்டும் தடங்கல் இல்லாமல் முடிந்து விட வேண்டும்! என்ற எண்ணம் மனதில் இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கும் சுலபமாக ஏதாவது ஒரு பரிகாரத்தை அந்த இறைவன் தராமல் இருந்து விடுவாரா? எப்படி பட்டவர்களும் சுலபமாக செய்யக்கூடிய வெற்றி தரும் பரிகாரம் தான் இது. சாதரணமாக எந்த மனிதரும் வெறும் நெற்றியோடு இருக்கக்கூடாது. திருநீறு, குங்குமம் இவைகளில் ஏதாவது ஒன்றையாவது வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சாஸ்திரம். இதே போன்று தான் ஒரு பொருளை நம் நெற்றியில் வைத்துக்கொண்டால், கெட்ட சக்திகள் நம்மை அண்டாது. நாம் எடுத்த காரியத்தில் எந்த தடையும் ஏற்படாது. நம் கையில் எடுக்கும் காரியங்கள் எல்லாம் வெற்றியடையும். அப்படி ஒரு பொருளா? அது என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ruthratcham

அந்தப் பொருள் எந்த ரகசியமான பொருளும் இல்லை. நம்மில் பலபேர் அணிந்திருக்கும் ருத்ராட்சம் தான். ருத்ராக்ஷத்தை கழுத்தில்தான் அறிந்துகொள்வார்கள் நெற்றியில் எப்படி இட்டுக்கொள்ள வேண்டும்? என்ற சந்தேகம் எல்லோருக்கும் வந்திருக்கும். மஞ்சளை இழைத்து பூசிக் கொள்வதற்காக ஒரு கல் வைத்திருப்பீர்கள். அந்தக் கல்லில் 4, 5 சொட்டு தண்ணீர் விட்டு, எந்த முகம் ருத்ராட்சம் கிடைத்தாலும் பரவாயில்லை, அதை இரண்டு நிமிடம் நன்றாக அந்த கல்லில் இழைத்தால், ஒரு துளி அளவு விழுது கிடைக்கும். அந்த விழுதை நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும்.

இந்த விழுதை தினம்தோறும் நெற்றியில் வைத்துக் கொள்ள முடியாதவர்கள், ஏதாவது புதியதொழில் தொடங்கும் போதும், வேலைக்கு நேர்காணலுக்கு செல்லும் போதும், அல்லது முக்கியமான வேலைக்கு செல்லும்போதும் வைத்துக் கொண்டு செல்லலாம். நிச்சயமாக நீங்கள் செல்லும் அந்த காரியம் வெற்றியில் தான் போய் முடியும். எப்படிப்பட்ட தடங்கல்கள், இன்னல்கள் வந்தாலும் அதை தடுக்கும் சக்தியானது இந்த ருத்ராட்ச திலகத்திற்கு உள்ளது. ருத்ராட்சத்தை இழைக்கும் போது 5 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

‘ஓம் க்ரீம் சிவசிவ’

எம்பெருமான் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்களை தீர்த்து வைப்பதை, உங்களால் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கண் கூட காணமுடியும் ஒரு எளிய பரிகாரம் தான் இது. அதனால் இந்த பரிகாரத்தை செய்யும் போது எந்தவித தீட்டும் இருக்கக்கூடாது. சுத்தமாக இருப்பது நல்லது.

- Advertisement -

sivan

ஆனால் நீங்கள் கையில் வைத்திருக்கும் ருத்ராட்சமானது போலியாக இருக்கக்கூடாது. போலியான ருத்ராட்சத்தை இழைத்து வைத்துக் கொண்டால் எந்த ஒரு பலனும் கிடைக்காது. ஏனென்றால் தற்போது ருத்ராட்சங்கள் செயற்கையாக அதிகமாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
நீங்கள் கடனாளி ஆகாமல் இருக்க உங்களது பர்ஸை இப்படி வைத்துக் கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kariya thadai neenga Tamil. Kariyam vetri pera Tamil. Ruthratcham palangal Tamil. Suba kariya thadai nenga