அட காசு கொடுக்காம தானே கிடைக்குது! அப்படின்னு இந்த 5 பொருட்களை யார் கையில் இருந்தும் இனாமாக வாங்காதீங்க. உங்கள் குடும்பத்தில் பெரிய கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

sugar
- Advertisement -

சில பேர் நினைப்பார்கள். காசு கொடுக்காமல் வரக்கூடிய பொருட்களை எல்லாம் வாங்கி நம் வீட்டில் வைத்து பயன்படுத்தலாம் என்று. ஓசிலதான வருது. அதை ஏன் வேண்டாம் என்று சொல்லணும். அப்படி கிடையாது. சில பொருட்களை காசு கொடுக்காமல் அடுத்தவர்கள் கையில் இருந்து நாம் வாங்கும் போது அது நமக்கு ஏதாவது ஒரு வகையில் தீராத கஷ்டத்தை கொடுத்து விடும். அடுத்தவர்கள் கையில் இருந்து காசு கொடுக்காமல் வாங்கவே கூடாதா அப்படிப்பட்ட பொருட்கள் என்னென்ன என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

காசு கொடுக்காமல் அடுத்தவர்கள் கையில் இருந்து வாங்கவே கூடாது பொருட்கள்:
எண்ணெய், அடுத்தவர்கள் கையில் இருந்து காசு கொடுக்காமல் இனமாக நாம் வாங்கவே கூடாது. நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், என்று எந்த எண்ணெய் வகையாக இருந்தாலும் யாரும் அந்த எண்ணெயை அடுத்தவர்கள் வீட்டில் போய் கடனாக நீங்கள் வாங்கவே வாங்காதீங்க. யாருக்கும் கடன் கொடுக்கவும் கொடுக்காதீங்க.

- Advertisement -

இப்போதெல்லாம் ரேஷன் பாமாயிலை வாங்கி இலவசமாக கஷ்டப்படுபவர்களுக்கு கொடுக்கிறார்கள். அதன் மூலம் தவறு கிடையாது. இனாமாக அந்த எண்ணெயை கொடுக்காதீங்க. அதற்கு உண்டான பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால் சாஸ்திரத்திற்காகவாவது 1 ரூபாயை வாங்கிக் கொண்டு அந்த எண்ணெயை கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இலவசமாக எண்ணெயை தானம் கொடுக்க வேண்டும் என்றால், அது கோவிலுக்கு தான் கொடுக்க வேண்டும்.

அதேபோலத்தான் ரேஷன் சர்க்கரை, கோதுமை, அரிசி, என்று பல பொருட்களை நாம் வாங்குவோம். அந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு இலவசமாக கொடுக்காதீங்க. ஒரு ரூபாயை வாங்கிக் கொண்டு கொடுங்கள். அப்போது அந்த பொருட்களை பெற்றவர்களுக்கும் எந்த பாதிப்பும் வராது. அந்த பொருளைக் கொடுக்கும் உங்களுக்கும் எந்த பாதிப்பும் வராது.

- Advertisement -

இரும்பு சம்பந்தப்பட்ட கூர்மையாக இருக்கக்கூடிய பொருட்களை யாரிடம் இருந்தும் இனமாக வாங்க வேண்டாம். வீடு கூட்டும் துடைப்பம், மாப், புடைக்கக்கூடிய முறம், இவைகளை அடுத்தவர்கள் வீட்டிலிருந்து இனமாக நாம் நம் வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. வீட்டில் இருக்கும் அருவாமனை, கத்தி, கொடுவா போன்ற பொருட்களை இனமாக பக்கத்து வீட்டுக்கோ அல்லது உறவுக்காரர்கள் வீட்டுக்கோ அடிக்கடி இரவல் கொடுக்காதீங்க.

கைக்குட்டை. அடுத்தவர்களுடைய கைகுட்டையை தப்பி தவறி உங்களிடம் வந்துவிட்டால் கூட அதை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. முடிந்தால் அந்த கை குட்டையின் உரிமையாளரிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள். இல்லை என்றால் அதை தூக்கி குப்பையில் போட்டு விடுங்கள். அந்த கைக்கட்டையை துவைத்து கூட மீண்டும் நீங்கள் பயன்படுத்தக் கூடாது.

இதையும் படிக்கலாமே: உங்களுக்குன்னு வரும் போது எல்லாமே லேட்டா நடக்குதா? தடையில்லாத வெற்றி பெற வழிபட வேண்டிய தெய்வம் என்ன?

மேலே சொன்ன விஷயங்களில் ஒரு சிலவற்றை நீங்கள் தெரியாமல் செய்திருக்கலாம். அதன் மூலம் எந்த ஒரு பிரச்சனை வந்து விடுமோ என்று கவலைப்படாதீங்க. அறிந்து இனி இந்த தவறுகளை செய்யாதீங்க. உங்களுடைய குடும்பத்திற்கு நன்மையை கொடுக்கக்கூடிய இந்த குறிப்புகளில் நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -