- Advertisement -

இந்திர ஏகாதசி வழிபாடு

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்க கூடிய கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் நாம் முற்பிறவியில் செய்த பாவங்களே காரணமாக திகழ்கின்றன. அப்படிப்பட்ட பாவங்களில் இருந்து வெளியே வருவதற்கு உதவக்கூடிய ஒரு அற்புதமான ஏகாதசி விரதமாகத்தான் மகாளய பட்சத்தில் வரக்கூடிய தேய்பிறை ஏகாதசி திகழ்கிறது. இந்த ஏகாதசியை இந்திர ஏகாதசி என்று கூறுவது உண்டு. இந்திர ஏகாதசி அன்று யாரொருவர் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் முன் ஜென்மத்தில் செய்த அனைத்து பாவங்களும் நீங்கும். பெருமாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு எளிமையான இந்திர ஏகாதசி வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இந்திர ஏகாதசி வழிபாடு

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு விதமான பெயர்கள் இருக்கிறது. அந்த ஏகாதசி அன்று விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்யும்பொழுது ஒவ்வொரு விதமான பலன்கள் நமக்கு உண்டாகும். அந்த வகையில் மஹாளய பட்சத்தில் வரக்கூடிய தேய்பிறை ஏகாதசியை நாம் இந்திர ஏகாதிசி என்று கூறுகிறோம். இந்த ஏகாதசியில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பாவங்களும் நீங்கும். மிகவும் எளிமையான முறையில் பெருமாளை வழிபாடு செய்யும் வழிமுறையை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி புதன்கிழமை புரட்டாசி 1 ஏகாதசி திதி. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து வரக்கூடிய இந்த அற்புதமான நாளில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய அனைத்து தெய்வங்களின் உருவப்படத்திற்கும் மலர்களை சாற்ற வேண்டும். பெருமாளுக்கு முன்பாக ஒரு சொம்பில் துளசி தீர்த்தத்தை தயார் செய்து வைத்து “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தையும் “ஓம் ஸ்ரீம் லலிதம் லம்போதரம்” என்னும் மந்திரத்தையும் 51 முறை கூறி விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். காலையிலும் மதியத்திலும் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் அந்த துளசி தீர்த்தத்தை மட்டுமே அருந்தி பெருமாளின் நாமத்தை கூறி விரதம் இருக்க வேண்டும்.

மாலை நேரத்தில் வீட்டு பூஜை அறையில் பெருமாளுக்கு முன்பாக ஒரு வாழை இலை அல்லது மண் தட்டை வைத்து அதில் வீட்டிலேயே பச்சரிசியில் தயார் செய்த தயிர் சாதத்தை வைத்து நன்றாக பரப்பிக் கொள்ளுங்கள். அந்த தயிர் சாதத்தின் நடுவில் மாதுளம் பழ முத்துக்களை வைத்து பெருமாளின் நாமத்தை வரைய வேண்டும். (முக்கிய குறிப்பு: தயிர் சாதத்தை தாளிக்கக்கூடாது, பச்சரிசியில் தான் செய்ய வேண்டும்). நெய்வேத்தியமாக மஞ்சள் நிற லட்டு அல்லது பூந்தியை வைக்க வேண்டும்.

- Advertisement -

அந்த தயிர் சாதத்துக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை 27 முறையும் “ஓம் ஸ்ரீம் லலிதாம் லம்போதரம்” என்னும் மந்திரத்தை 27 முறையும் கூறி முடித்துவிட்டு மகாலட்சுமி அஷ்டகத்தை ஒரு முறை படிக்க வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு இந்த தயிர் சாதத்தை வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பிரசாதமாக உண்ண வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பெருமாளின் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாட்டை செய்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அருளைப் பெற உதவும் புரட்டாசி முதல் நாள்

நம்முடைய பாவங்களை நீக்கக்கூடிய அற்புதமான இந்திர ஏகாதசி அன்று பெருமாளை முழு மனதோடு நினைத்து இந்த வழிபாட்டை செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்