நேருக்கு நேர் .உலககோப்பையினை வெல்ல இந்தியாவிற்கு இந்த அணி பெரும் சவாலாக இருக்கும் – டூபிளசிஸ்

இந்த வருடம் மே மாத இறுதியில் 50 ஓர் உலகக்கோப்பை இங்கிலாந்து நாட்டில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான வீரர்களை அனைத்து அணியும் தயார் செய்து முழுப்பயிற்சியுடன் மற்றும் உறுதியான முடிவுடனும், கோப்பையை வெல்லும் நோக்கிலும் அணி வீரர்களை வைத்திருக்கின்றனர்.

worldcup

அதைப்போன்று அனைத்து உலககோப்பை போட்டிகளிலும் பலமான அணியாக களமிறங்கும் தென்னாபிரிக்க அணி. ஆனால், அதிர்ஷடமின்மை காரணமாக அந்த அணி எவ்வளவு பலமான வீரர்களை வைத்திருந்தாலும் ஒருமுறை கூட உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது இல்லை. இந்நிலையில், அந்த அணியின் கேப்டன் டூபிளசிஸ் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : தற்போது உள்ள அணிகளில் இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. கடந்த பல தொடர்களாக அவர்கள் எங்கு சென்றாலும் வெற்றியை அடைகிறார்கள். இருப்பினும், எங்கள் அணியும் குறைத்து மதிப்பிட வேண்டாம். எங்கள் அணி வீரர்களும் தற்போது நல்ல நிலைமையில் ஆடிவருகின்றனர்.

indian-team

ஆனாலும், இந்திய அணியை தற்போது நேருக்குநேர் எதிர்க்கும் அணியாகவும், உலககோப்பையினை இந்தியா அடைய பெரும் சவாலாக இருக்கும் அணியாக இங்கிலாந்து திகழும். ஏனெனில், இங்கிலாந்தில் போட்டிகள் நடைபெறுவதால் அவர்களுக்கு அந்த மைதானங்களில் பல போட்டிகளை ஆடிய அனுபவம் அவர்களுக்கு கைகொடுக்கும் என்று தெரிவித்தார் டூபிளசிஸ்.

இதையும் படிக்கலாமே :

பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் இவரது பங்களிப்பு எனக்கு வியப்பாக உள்ளது – இந்திய பீல்டிங் பயிற்சியாளர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்