பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் இவரது பங்களிப்பு எனக்கு வியப்பாக உள்ளது – இந்திய பீல்டிங் பயிற்சியாளர்

sridhar
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியுடனான முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது போட்டி நாளை (30-01-2019) நடைபெற உள்ளது.

rayudu

இந்நிலையில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் இந்திய அணி குறித்தும் அணி வீரர்கள் குறித்தும் தனது கருத்தினை தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் பீல்டிங் தற்போது சிறப்பாக உள்ளது. அணியில் இளம் வீரர்களுக்கு இணையாக சீனியர் வீரர்களும் பீல்டிங் செய்கிறார்கள்.

- Advertisement -

இளம்வீரர்கள் முதல் சீனியர் வீரர்கள் வரை உடற்கட்டுக்கோப்புடன் இருக்க தினமும் பயிற்சியை மேற்கொள்கின்றனர் . இந்த பிட்னஸ் பயிற்சியே அவர்களை இந்த அளவிற்கு சிறப்பாக வைத்துள்ளது. குறிப்பாக சிறிய பிரச்சைக்கு பின் அணியில் இணைந்த ஹார்டிக் பாண்டியா பழைய உத்வேகத்தை காட்டிலும் தற்போது வேகமாக உள்ளார்.

அவரின் பந்துவீச்சு கடந்த போட்டியில் சிறப்பாக இருந்தது. மேலும், அவர் 10 ஓவர்களையும் முழுமையாக வீசினார் என்பதும் அணிக்கு பலமே. கவர் திசையில் அவர் பிடித்த கேட்ச் மிகவும் அற்புதம். அவரின் அர்ப்பணிப்பு இதன்மூலம் தெரிகிறது. ஆனாலும், அவர் அந்த விக்கெட்டை கொண்டாடாமல் அமைதியாக இருந்தார். என்று ஸ்ரீதர் தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

நான் கனவிலும் நினைக்காதது அடுத்த வருடம் நடக்க உள்ளது. ஆவலுடன் காத்திருக்கிறேன் – ரஷீத் கான்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -