இத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை – இந்திய அணி சாதனை

team

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டாஸ் 50 ஓவர்கள் முடிவில் 324 ரன்களை குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் 87 ரன்களையும் தவான் 66 ரன்களையும் குவித்து சிறப்பான துவக்கத்தினை அளித்தனர்.

bay

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் ப்ரேஸ்வெல் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அனைவரும் அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குலதீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருது ரோஹித் சர்மாவிற்கு கிடைத்தது.

இந்த போட்டியில் இந்திய அணி விசித்திரமான ஒரு சாதனையை செய்துள்ளது. அதுயாதெனில், இந்திய அணியின் டாப் 5 வீரர்கள் இந்த போட்டியில் 40 ரங்களுக்கு மேல் குவித்தனர். ரோஹித் 87, தவான் 66, கோலி 43, ராயுடு 47 மற்றும் தோனி 48 ரன்களை குவித்தனர். இதுபோன்ற நிகழ்வு இந்திய அணியில் இதுவே முதல் முறை வரலாற்று பதிவாகியுள்ளது.

dhoni

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி நாளை (28-01-19) பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

இவர்களுக்கு எதிரான ஆட்டத்திற்கு வழியினை கண்டு பிடியுங்கள். அப்போதுதான் இந்திய அணியை வெல்ல முடியும். நியூஸி அணிக்கு அறிவுரை வழங்கிய – சச்சின்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்