இவர்களுக்கு எதிரான ஆட்டத்திற்கு வழியினை கண்டு பிடியுங்கள். அப்போதுதான் இந்திய அணியை வெல்ல முடியும். நியூஸி அணிக்கு அறிவுரை வழங்கிய – சச்சின்

sachin
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டாஸ் 50 ஓவர்கள் முடிவில் 324 ரன்களை குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் 87 ரன்களையும் தவான் 66 ரன்களையும் குவித்து சிறப்பான துவக்கத்தினை அளித்தனர்.

dhoni

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் ப்ரேஸ்வெல் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அனைவரும் அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குலதீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருது ரோஹித் சர்மாவிற்கு கிடைத்தது.

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கான வழியை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் துவக்க வீரர்கள் சிறப்பான அடித்தளம் அமைக்கின்றனர். அதன் காரணமாக இந்திய அணி பெரிய இலக்கினை குவிக்க அவர்கள் உதவுகின்றனர். ஆனால், இந்திய அணி பந்து வீச்சாளர்களை சமாளிக்கும் வழியினை நியூசிலாந்து அணியினர் கண்டுபிடிக்க வேண்டும்.

kuldeep

அதிலும், சாஹல் மற்றும் குல்தீப் இருவரின் பந்துவீச்சினை சமாளித்து அவர்களுக்கு எதிராக ரன் குவிக்கும் வழியினை நியூசிலாந்து வீரர்கள் கண்டு பிடித்தால் தான் இந்திய அணியினை அவர்கள் வீழ்த்த முடியும். இல்லையென்றால் இந்திய அணியை ஒன்றும் செய்ய முடியாது என்று சச்சின் தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

லாராவை பின்னுக்கு தள்ளி ஜாம்பவான் பட்டியலில் முன்னேறிய நம்ம தல தோனி – தோனி மாஸ்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -