முதல் போட்டியில் தோல்வி. ரசிகர்கள் ஏமாற்றம் தோல்விக்கு காரணம் இதுதான்

lose-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னி நகரில் துவங்கிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 288 பேட்டிங் குவித்தது. இதனால், இந்திய அணிக்கு 289 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.இதனை தொடர்ந்து இந்திய அணி விளையாட துவங்கியது.

lose

இதனை தொடர்ந்து இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் தவான் இன்னிங்க்ஸை துவங்கினர்.ஆரம்பத்திலே தவான் தனது விக்கெட்டினை ரன் எடுக்காமலே பறிகொடுத்தார். அடுத்து வந்த ரன் 3 ரன்களிலும் அம்பத்தி ராயுடு 0 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பிறகு தோனி மட்டும் ரோஹித் இணைந்து ஓரளவிற்கு நன்றாக ஆடினார்கள்.

- Advertisement -

தோனி 51 ரன்களும்,சிறப்பாக விளையாடிய ரோஹித் அதிரடியாக 133 ரன்களை குவித்தார்.இறுதியில் இந்திய அணி 254 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் 10 ஓவர்கலில் வெறும் 26 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரது சிறப்பான பந்துவீச்சே இந்திய தோல்விக்கு கொண்டு சென்றது.

lose 2

மேலும் நடுவரிசை ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணியின் ரன்ரேட் சரிய ஆரம்பித்தது. ரோஹித் உடன் ஒருவர் நிலைத்து நின்றிருந்தால் ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பி இருக்க வாய்ப்பிருந்தது. இந்திய அணியின் நடுவரிசையில் நிலையாக ஆடினால் மட்டுமே இதுபோன்ற இலக்கை துரத்தமுடியும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி போட்டியில் சதமடித்து சாதனை பட்டியலில் இணைந்த ஹிட்மேன்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -