ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி போட்டியில் சதமடித்து சாதனை பட்டியலில் இணைந்த ஹிட்மேன்

rohith-s

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னி நகரில் துவங்கிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 288 ரன்களை குவித்தது. இதனால், இந்திய அணிக்கு 289 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.இதனை தொடர்ந்து இந்திய அணி விளையாட துவங்கியது.

rohit

இதனை தொடர்ந்து இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் தவான் இன்னிங்க்ஸை துவங்கினர்.ஆரம்பத்திலே தவான் தனது விக்கெட்டினை ரன் எடுக்காமலே பறிகொடுத்தார். அடுத்து வந்த கோலி 3 ரன்களிலும் அம்பத்தி ராயுடு 0 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பிறகு தோனி மட்டும் ரோஹித் இணைந்து ஓரளவிற்கு நன்றாக ஆடினார்கள்.

இதனிடையே தோனி 51 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ரோஹித் சிறப்பாக விளையாடி சதமடித்தார். இது அவருடைய 22 சதமாகும். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த இந்திய வீரர் பட்டியலில் சச்சினுக்கு அடுத்து 7 சதம் அடித்து இரண்டாவது இடத்தில் இணைந்தார்.

rohith

தற்போதுவரை இந்திய 244 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதில் ஒரு ஆறுதல் ரோஹித்தின் அதிரடி ஆட்டம் மட்டுமே. ரோஹித் 129 பந்துகளை சந்தித்து 133 ரன்களை குவித்தார்.

இதையும் படிக்கலாமே :

புதிய மைல்கல்லை எட்டிய தல தோனி. சாதனை விவரங்கள் இதோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்