இந்தியா வெற்றிபெறும் தருவாயில் பாதியில் நிறுத்தப்பட்ட நியூஸி ஒருநாள் போட்டி – காரணம் இதுதான்

indian-team

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அணி குப்தில் மற்றும் முன்ரோ ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

shami

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி துவக்கம் முதலே சரிவை சந்தித்தது. துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இழந்தனர். 64 ரன்களை அடித்து ஆறுதல் அளித்தார். பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக நடையை கட்ட நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்தது.

பிறகு இந்தியா தனது ஆட்டத்தினை ஆரம்பித்தது இந்திய அணி 10 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 44 ரன்களை அடித்தது. இன்னும் இந்திய அணியின் வெற்றிக்கு 114 ரன்கள் தேவை என்ற நிலையில் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. தவான் 29 ரன்களுடனும் கோலி 2 ரங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெளியேறினர்.

koli dhawan

ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்ட காரணம் சூரியனில் இருந்து அதிக அளவு வெப்பம் மைதானத்தின் மீது விழுவதால் வீரர்களால் சரியாக விளையாட முடியவில்லை. இதன் காரணமாக ஆட்டம் 30 நிமிடம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 30 நிமிடம் கழித்தே நிலைமை தெரியவரும் என்று மைதான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்கலாமே :

அதிவிரைவாக 5000 ரன்களை ஒருநாள் போட்டியில் அடித்து புதிய சாதனை படைத்த – இந்திய வீரர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்