IND vs AUS T20I : வெற்றிக்கு தேவையான ரன்களை அடித்தோம். ஆனால், இவர் இப்படி அடித்தால் எப்படி நமக்கு வெற்றி கிடைக்கும் – கேப்டன் கோலி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி20 போட்டி நேற்று பெங்களுருவில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதனபடி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கோலி 72 ரன்களையும், ராகுல் 47 மற்றும் தோனி 40 ரன்களையும் குவித்தனர்.

koli-dhoni

பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி மேக்ஸ்வெல்லின் அபார சதம் மூலம் போட்டியினை 19.4 ஓவர்களில் 194 ரன்கள் குவித்து எளிதாக வென்றது. மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 குவித்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். இதன்மூலம் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் என இரண்டு விருதினையும் தட்டிச்சென்றார். ஆஸ்திரேலிய அணி (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

பிறகு இந்த போட்டியின் தோல்வி குறித்து பேசிய கோலி : ஆஸ்திரேலிய வீரர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடினர். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்களே மேலும், 190 ரன்கள் என்பது மற்ற மைதானங்களில் வெற்றிக்கு போதுமான ரன்கள் தான். ஆனால், பெங்களூரு மைதானத்தில் இருந்த டியூ காரணமாக அந்த ரன்கள் பத்தவில்லை. மேலும், மேக்ஸ்வெல் போன்ற வீரர் அவ்வளவு நன்றாக ஆடினால் ஒன்றும் செய்ய முடியாது.

Maxwell

அவரின் விக்கெட்டை வீழ்த்த நினைத்தோம் ஆனால் முடியவில்லை. நான் நேற்று பந்துவீச்சாளர்களிடம் கடுமையாக நடந்துகொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் மைதானம் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்து இருந்தால் அவர்கள் நிச்சயம் கட்டுப்படுத்தி இருப்பார்கள். தோல்வி என்னை பெரிதாக பாதிக்கவில்லை. அடுத்த தொடரில் மீண்டு வருவோம் என்று கூறினார் கேப்டன் கோலி.

- Advertisement -