தாக்குதல் நடத்தப்பட்ட 3 இடங்கள் மற்றும் நேரம். தகர்க்கப்பட்ட பரப்பளவு – வெளியாகிய அதிகாரபூர்வ அறிவிப்பு

Pulwama

புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. பால்கோட் என்னும் பகுதியில் நடந்த இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதல் மிராஜ் 2000 எனும் 12 போர் ரக விமானங்கள் மூலம் நடத்தப்பட்டது. இந்தத்தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு முழுவதுமாக அழிக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Miraj-flight

இந்த தாக்குதலில் 1000 கிலோ வெடிகுண்டை முகாம்களின் மீது வீசி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்த முகம் முழுவதும் அழிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், குறிவைக்கப்பட்ட இரண்டு தலைவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை 200 முதல் 300 வரை என்று இந்திய விமானப்படை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் தாக்குதல் நடைபெற்ற இடம் மற்றும் சரியான நேரங்கள் மற்றும் அழிக்கப்பட்ட பரப்பளவு போன்ற துல்லிய தகவல்கள் தற்போது நமக்கு கிடைத்துள்ளன.

தாக்கப்பட்ட இடங்கள் மற்றும் நேரம் : அதிகாலை 3.45 மணிக்கு முசாபராபாத் பகுதியிலும், 3.48 மணிக்கு பால்கோட் பகுதியிலும் மற்றும் 3.58 மணிக்கு சக்கோதி என்ற இடத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பால்கோட் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமை இடம் என்பதால் அந்த முகாம் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. மற்ற இடங்களிலும் துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டு உடனே மிராஜ் போர் விமானங்கள் இந்திய படைத்தளத்திற்கு திரும்பின.

Pakistan

தகர்க்கப்பட்ட பரப்பளவு : ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம் மட்டுமே அந்நாட்டின் முக்கிய பெரிய அளவிலான பரப்பளவு கொண்ட அபாயமான இடமாகும். எனவே, அதனை முதன்மை குறியாக வைத்து தாக்கிய இந்திய விமானப்படை அந்த முகாமின் மொத்த பரப்பளவுமான 7 எக்கரையும் அடித்து தூக்கி உள்ளது. இந்த தாக்குதல் மூலம் இந்தியாவின் பலம் அவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள் என்பது உண்மையே.

இதையும் படிக்கலாமே :

மோடியை நிச்சயம் கொள்வேன் என்று திட்டிதீர்க்கும் தீவிரவாதி – வீடியோ. தயவு செய்து இதுபோன்ற வீடியோவினை பகிர வேண்டாம்