மோடியை நிச்சயம் கொள்வேன் என்று திட்டிதீர்க்கும் தீவிரவாதி – வீடியோ. தயவு செய்து இதுபோன்ற வீடியோவினை பகிர வேண்டாம்

Modi

புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை சரியாக 3.30 மணி அளவில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. பால்கோட் என்னும் பகுதியில் நடந்த இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதல் மிராஜ் 2000 எனும் 12 போர் ரக விமானங்கள் மூலம் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 1000 கிலோ வெடிகுண்டை ஜெய்ஷ்-இ-முகமது முகாம்களின் மீது வீசி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்த முகம் முழுவதும் அழிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியை பழிவாங்குவதாக ஒரு தீவிரவாதி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் இந்த விடீயோவினை பகிரவேண்டாம் என்று நாங்கள் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் இது கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட சில மதவாத பிரச்சினையினால் பாகிஸ்தான் தீவிரவாதி விடுத்த மிரட்டல் ஆகும் . ஆனால், அதனை நம் நண்பர்கள் சிலர் தெரியாமல் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிட்டு வருகிறார்கள்.

நாடு முழுவதும் தற்போது பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இதுபோன்ற சூழலில் தேவை இல்லாமல் கிளர்ச்சியை ஏற்படுத்தும் இதுபோன்ற விடியோக்கள் பகிர்வதை நிறுத்தவும். மேலும், இந்த தாக்குதல் சம்பந்தப்பட்ட உடனடி செய்திகளை வழங்க நாங்கள் இருக்கிறோம். எங்களது வலைப்பக்கத்தில் தொடர்ந்து செய்திகளை நாங்கள் தெரிவிக்கிறோம். “ஜெய் ஹிந்த்”

இதையும் படிக்கலாமே :

Indian air force attack : குறிவைக்கப்பட்ட இரண்டு தலைவர்கள். பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை – முழுவிவரம்