புல்வாமா தாக்குதல் : இந்திய மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த அசிங்கம். இதுதேவையா உங்களுக்கு

Pakistan

கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.

pulwama

நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் மைதானங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு மனதாக முடிவினை எடுத்து அதனை செயல்படுத்தியது.

அதன்படி இந்திய மைதானங்கள் அனைத்திலிருந்தும் பாகிஸ்தான் அணிவீரர்கள் புகைப்படம் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படங்கள் ஏதும் இனிமேல் இந்திய கிரிக்கெட் மைதானங்களில் இருக்காது என்றும் மைதான நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

இவர்களின் இந்த முடிவு ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும், இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடக்கூடாது என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

வித்தியாசமான ஸ்டைல் சிக்ஸர் அடித்த யுவராஜ் சிங். புது உத்வேகத்தோடு ஐ.பி.எல் போட்டிகளை எதிர்கொள்ள தயாராகிறார் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்