வித்தியாசமான ஸ்டைல் சிக்ஸர் அடித்த யுவராஜ் சிங். புது உத்வேகத்தோடு ஐ.பி.எல் போட்டிகளை எதிர்கொள்ள தயாராகிறார் – வீடியோ

yuvraj

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

Yuvraj

மேலும், உலகக்கோப்பை தொடருக்கு முன் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் மும்பை அணிக்காக குறைந்தபட்ச விலைக்கு ஏலம் போனார். இந்திய அணியின் முன்னணி வீரரான யுவராஜ் பலவருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.

தற்போது ரஞ்சி போட்டிகளில் விளையாடிவரும் யுவராஜ் வித்தியாசமான முறையில் சிக்ஸர் அடித்து அசத்தினார். அந்த சிக்ஸர் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை அணிக்காக ஆட இருக்கும் யுவராஜ் இந்த தொடரில் நிச்சயம் பிரகாசிப்பார் என்று மும்பை அணியின் ரசிகர்கள் அவரை ஆதரித்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

ஹார்டிக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டர் இல்லை. அவரை விட இவர்தான் சிறந்த ஆல்ரவுண்டர் – மேத்யூ ஹைடன்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்