Cricket news Tamil | மெக்ராத் பவுண்டேஷனுக்கு தங்களது உதவியை செய்த இந்திய அணி

pink
- Advertisement -

“பிங்க் டே” டெஸ்ட் என்று ஆஸ்திரேலியாவில் ஒரு வழக்கம் உள்ளது. அது யாதெனில், டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தினை அடுத்து வரும் போட்டி எப்படி “பாக்ஸிங் டே” டெஸ்ட் என்று அழைக்கபடுகிறதோ அதே போன்று ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் போட்டி “பிங்க் டே” டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படுகிறது.

pink 1

இந்த டெஸ்ட் போட்டிக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த போட்டியில் முழுக்க பிங்க் நிறத்தால் நிறைந்து இருக்கும் இதற்க்கு காரணம் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் நடத்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு ஆகும். எனவே ஒவ்வொரு வருடமும் இந்த பிங்க் டே போட்டியின் மூலம் நிதி திரட்டி புற்று நோயால் பாதிக்கப பட்டவர்களுக்கு மெக்ராத் மருத்துவ உதவிகளை செய்வார்.

- Advertisement -

மெக்ராத் “மெக்ராத் பவுண்டேஷன்” மூலம் புற்றுநோயால் பாதிக்க பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்கிறார். ஏனென்றால், மெக்ராத் மனைவி அவரது 34 ஆம் வயதிலே மார்பக புற்றுநோய் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அதன் விளைவாக தன்னால் முடிந்தவரை புற்றுநோயால் பாதிக்கப்படும் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த பணியினை அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

pink 2

இந்த நல்ல காரியத்திற்காக இந்திய அணி வீரர்களும் தங்கள்து பங்கினை கொடுத்துள்ளனர். அது யாதெனில், இந்திய வீரர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு பிங்க் நிற தொப்பியில் தங்களது கையெழுத்தினை இட்டு அதனை மெக்ராத் இடம் ஒப்படைத்தனர் . அதனை ஏலத்தில் விட்டு அந்த தொகை மெக்ராத் பவுண்டேசனுக்கு செல்லும். முன்னதாக இந்திய கேப்டன் கோலி அவரது பேட் மற்றும் கிளவுஸ் போன்றவைகளில் பிங்க் நிறம் பொரித்து ஆடினார். அவர் பயன்படுத்திய அந்த பேட்டும் ஏலத்தில் விடப்பட இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

விஹாரியின் ஆபத்தான பகுதியில் அடித்த பந்து. தேற்றிய பண்ட் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -