விஹாரியின் ஆபத்தான பகுதியில் அடித்த பந்து. தேற்றிய பண்ட் – வீடியோ

koli 2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னி நகரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டாஸ் அணி 622 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணித்தரப்பில் புஜாரா 193 ரன்களை குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக இளம் வீரர் பண்ட் 159* ரன்களை குவித்து களத்தில் இருந்தார்.

Ash

இதனையடுத்து தங்களது முதல் இன்னிங்க்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களை அடித்துள்ளது. இன்னும் 386 ரன்கள் பின்னிலையில் ஆஸ்திரேலிய அணி உள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தினை தொடர்ந்த ஆஸ்திரேலிய வீரர்கள் நிதானமாக ஆடிவந்தனர். அப்போது மார்னஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். 37வது ஓவரை இந்திய அணியின் குலதீப் யாதவ் வீசினார். அந்த பந்தை ஸ்வீப் ஷாட் அடித்தார் மார்னஸ். அப்போது மார்னஸ் அருகில் நின்று கொண்டிருந்த இந்திய அணி வீரரான விஹாரியின் ஆபத்தான பகுதியில் அடித்தது. வீடியோ இணைப்பு இதோ :

- Advertisement -

வலியால் சற்று நேரம் இருந்தவரை அருகில் சென்று தேற்றினார் ரிஷப் பண்ட் பிறகு ரஹானே மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் விஹாரியிடம் வந்து பார்த்து சென்றனர்.

இதையும் படிக்கலாமே :

கிரிக்கெட் : பண்ட் போட்டியில் விளையாடினால் நான் காசு கொடுத்து கூட கிரிக்கெட் பார்க்க தயார் – கில்கிறிஸ்ட்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -