இந்தியா டீம் : கடந்த 2 ஆண்டுகளில் கோலி சந்தித்த மிக மோசமான சாதனை

Koli

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனை அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது.

Toss

இந்தியா கடந்த பல ஆண்டுகளாக பல தொடர்களிலும், வெளிநாட்டு தொடர்களிலும் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தது. அப்படி இருக்கும் சமயத்தில் இந்தியாவில் இந்திய மண்ணில் உலகக்கோப்பை தொடருக்கு முன் அடைந்த இந்த டி20 தொடர் தோல்வி இந்திய அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உலகக்கோப்பை தொடருக்கு முன் இப்படியா ஆவது என்பது போல ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 10 தொடர்களை இந்திய அணி விளையாடி உள்ளது. இதில் 9 தொடர்களை தொடர்ந்து வெற்றி பெற்றது. இந்த டி20 தொடர் தோல்வி மட்டுமே இந்திய அணி கடந்த 2 வருடங்களில் அடைந்த முதல் தொடர் தோல்வி ஆகும். கோலியின் தலைமையில் இந்திய அணி இந்திய மண்ணில் அடைந்த முதல் தொடர் தோல்வியாக பதிவாகி உள்ளது.

toss

இந்த தோல்வியின் காரணமாக இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று கோலி அதிரடி பேட்டி ஒன்றினையும் அளித்துள்ளார். மேலும், இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்ற தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கோலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

விராட் கோலி : ஆஸி அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பல அதிரடி நீக்கங்கள் இருக்கும்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Indian team first series defeat after two years