விராட் கோலி : ஆஸி அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பல அதிரடி நீக்கங்கள் இருக்கும்

Kohli

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனை அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது.

Toss

இந்நிலையில் இந்த தொடரில் பல மாற்றங்களை தொடர்ந்து செய்ய போகிறேன் என்று இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். டி20 தொடரின் தோல்வியின் விமர்சனத்தை எடுத்து கொள்ளாமல் வரப்போகும் இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி வீரர்கள் கவனம் செலுத்த உள்ளனர். மேலும், இந்திய அணி வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ராகுல், பண்ட் மற்றும் விஜய் ஷங்கர் போன்ற இளைஞர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டும். அப்போதுதான் அவர்களின் அனுபவம் கூடும் மேலும், உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் இருக்கும் பதட்டத்தினை அவர்கள் எதிர்கொள்ளாமல் இருக்க நிறைய போட்டிகளில் அவர்கள் விளாயாடி இருக்க வேண்டும் .

Team

இதனை செய்யவே உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்த தொடரில் வீரர்கள் மாற்றி மாற்றி இறக்கப்பட போகிறார்கள் என்று தெரிவித்தார் கோலி. உலகக்கோப்பை தொடரில் பலமாக களமிறங்கவே இந்த திட்டத்தினை செயல்படுத்த முடிவு செய்துள்ளேன் என்றும் தெரிவித்தார். இதனால் வரப்போகும் தொடரில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது .

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

சோயிப் அக்தர் : அபிநந்தன் குறித்தும். இந்தியா பாகிஸ்தான் போர் குறித்தும் கருத்தினை பதிவிட்ட அக்தர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Virat kohli planned to change the team