காட்டுவாசிகள் நடனம். அவர்கள் முறைப்படி மூக்குடன் மூக்கை வைத்து வணக்கத்தை கூறிய தோனி, ரவி சாஸ்திரி மற்றும் இந்திய அணி வீரர்கள் – வைரல் வீடியோ

bay

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டியில் இவ்விரு அணி வெற்றி பெற்று (1-0) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. நாளை இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது.

bay-oval

நாளை காலை பே ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறவுள்ளது. எனவே, இரண்டு அணிகளும் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியை சந்திக்க காட்டுவாசி குழுவினை சேர்ந்த ரசிகர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு இந்திய அணியும் அனுமதி வழங்கியது.

அதன்படி காட்டுவாசிகள் இந்திய அணிவீரர்களை அவர்களது முறைப்படி நடனமாடி வரவேற்று பின்னர் தங்களது வாழ்க்கை முறையினை நடனத்தின் மூலம் வெளிப்படுத்தினர். பிறகு இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் காட்டுவாசி முறைப்படி மூக்கோடு மூக்கு வைத்து தங்களது வணக்கத்தினை பரிமாறிக்கொண்டனர். இந்நிகழ்வு இணையத்தில் விடியோவாக வைரலாகி வருகிறது. இதோ உங்களுக்காக அந்த வீடியோ இணைப்பு :

நாளைய போட்டியில் இந்திய அணி வீழ்த்த நியூசிலாந்து அணி தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்திய அணி வீரர்களும் நியூசிலாந்தை வீழ்த்தும் முனைப்புடன் உள்ளதால் நாளைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணியில் இடம் பிடிப்பது என் கனவு நாளைய போட்டியில் இடம் கிடைத்தால் எனது திறமையினை நிரூபிப்பேன் – இந்திய அணியின் இளம் வீரர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்