இந்திய அணியில் இடம் பிடிப்பது என் கனவு நாளைய போட்டியில் இடம் கிடைத்தால் எனது திறமையினை நிரூபிப்பேன் – இந்திய அணியின் இளம் வீரர்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று (1-0) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. நாளை இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது.

நாளை காலை பே ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறவுள்ளது. எனவே, இரண்டு அணிகளும் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராகுலுக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் சுப்மான் கில் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்று இருந்தாலும் இன்னும் அணியில் ஆடவில்லை.

நாளைய போட்டியில் அவர் இறங்கினால் இந்திய அணிக்காக அறிமுகம் ஆவார். மேலும், ரஞ்சி போட்டியில் தொடர்ந்து அசத்திவரும் கில் நாளைய போட்டியில் தன்னுடைய இடத்தினை பற்றி கருத்து ஒன்றினை அளித்துள்ளார். அதி அவர் கூறியதாவது : நான் கடந்த சீசனில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணிக்கு தேர்வானேன். இதனை இன்றுவரை என்னால் நம்பமுடியவில்லை.

gill 1

மேலும், நாளை ஆடும் லெவனில் இடம் கிடைத்தால் நிச்சயம் எனது திறமையினை வெளிப்படுத்தி அணிக்கு ரன்களை சேர்ப்பேன். தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடுவதே எனது லட்சியம் என்று இளம் வீரரான கில் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணிக்கு நியூசிலாந்து காட்டுவாசிகளும் ரசிகர்களா? இந்திய அணியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்டுவாசிகள் – புகைப்படம் உள்ளே

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்