உங்களின் விருப்பங்கள், தேவைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றும் அற்புத மந்திரம்

indrakshi

மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், சுலோகங்கள் போன்றவை ஒரு மிகப்பெரிய கடலுக்கு ஒப்பானதாகும். நம் வேதத்தில் ஏராளமான மந்திரங்கள், சுலோகங்கள் கூறப்பட்டிருக்கின்றன. அவைகளில் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் நிறைவேற துதிப்பதற்காக இயற்றப்பட்டதாக இருக்கிறது. நம் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, நாம் விரும்பிய அனைத்தும் கிடைக்கச் செய்யும் அற்புத சக்தி வாய்ந்த மந்திரங்கள் அல்லது ஸ்தோத்திரங்கள் வெகுகுறைவாகவே இருக்கின்றன. அப்படியான ஒரு ஆற்றல் மிக்க ஸ்தோத்திரம் தான் இந்த இந்திராக்ஷி ஸ்தோத்திரம். இந்த இந்திராக்ஷி ஸ்தோத்திரம் துதிப்பதால் நமக்கு ஏற்படும் அற்புதமான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

indrakshi

இந்திராக்ஷி ஸ்தோத்திரம்

இந்திரன் வடிவாய் வந்தவள் எவளோ
இந்திராக்ஷி என்போம் அவளை
அனலாய் வந்தவள் அபயம் தந்தவள்
புனலாய் வருவாள் காலாய் ஆனவள்

விண்ணாய் நிற்பாள் மண்ணாய் இருப்பாள்
மனோரிதமே செய்பவள் அவளே
பகைவர் தன்னைப் பாரில் விரட்டிப்
பண்பைப் புகுத்திட வந்தவள் அவளே

saraswathi 2

ஆயிரம் கண்கள் பாங்குறக் கொண்டவள்
பாயும் புலியின் தோலைத் தரித்தவள்
கொஞ்சம் சதங்கை குலுங்கக் குலுங்கத்
தத்தோம் தக்தோம் வந்தோம் வந்தோம்

- Advertisement -

தந்தோம் வரமே தளரா உள்ளோடு
உந்தன் செயலைச் செய்திடு நன்றே
என்றே சொல்லி வந்தால் இன்றே
ஸித்தியைத் தந்திடும் தெய்வத் திருமகள்

mahalakshmi

துர்கை அவளே! சங்கரி அவளே
சாகம் பரியாய்ச் சார்ந்திடும் பவானி
சோகம் துடைக்கும் இந்திரை அவளே
இந்திராக்ஷி அன்னை அவளே

ஸுந்தரி அவளே சுருதியும் அவளே
தண்டினி அவளே கட்கினி அவளே
அவள் தாள் பணிவோம் அருளைப் பெறுவோம்
அவளைத் துதித்தால் இடரும் விலகும்

MathuraKaliamman

பகைமை தொலையும் சுகமும் பெருகும்
பற்பல கரகங்கள் படுத்தும் பாடும்
பட்டென ஒழியப் பாடுவோம் வாரீர்

சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தேவியர்களின் ஒரு மித்த சக்தியைக் கொண்டு தோன்றிய இந்திராக்ஷி தெய்வத்திற்குரிய சக்தி வாய்ந்த மந்திரம் இது. அற்புதமான இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும், இந்திராக்ஷி தேவியை மனதில் நினைத்து 108 முறை துதிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள் ஏற்படும். துர்மரணங்கள் ஏற்படாமல் காக்கும். கொடிய வியாதிகள் உடலை பீடிக்காமல் தடுக்கும். மிகுதியான செல்வப் சேர்க்கையையும், யோகங்களையும் ஏற்படுத்தும். துஷ்ட சக்திகளின் தொந்தரவுகளை அறவே நீக்கும். நேரடி, மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். தொழில், வியாபாரங்கள் சிறந்து நல்ல வருமானம் உண்டாகும். திருமண, தடை தாமதங்கள், புத்திர பாக்கியம் இல்லாமை, வேலைவாய்ப்பின்மை போன்ற அத்தனை குறைபாடுகளையும் நீக்கி நன்மைகளை ஏற்படுத்தும்.

amman

சிரஞ்சீவியும், தேவலோகவாசியமான ஸ்ரீ நாரதர் வைகுண்டத்தில் திருமாலை சந்தித்த போது தேவர்களும், அசுரர்களும் ஆரோக்கியமாக இருக்க மனிதர்கள் மட்டும் பல விதநோய்களால் அவதிப்படுவது குறித்து வருந்தினார். அதற்கு ஸ்ரீமன் நாராயணன் அனைத்து நோய்களையும் போக்கவும், சீரான செல்வ வளம் மிக்க வாழ்வை தரும் ஸ்ரீ இந்திராக்ஷி ஸ்தோத்திரத்தை நாரதருக்கு அருளினார். இந்திராக்ஷி ஸ்தோத்திரத்தை உண்மையான பக்தியுடன் துதிப்பவர்களின் வாழ்வில் ஏற்படும் அனைத்து துன்பங்களும் நீங்கி, வளங்கள் பெருகும் என ஸ்ரீமன் நாராயணனாகிய மகாவிஷ்ணு நாரதருக்கு உறுதி அளித்தார். அப்படியான இந்த இந்திராக்ஷி ஸ்தோத்திரத்தை துதிப்பதால் நம் வாழ்வில் நாம் விரும்பிய அனைத்தும் கிடைக்கப் பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
புதன் காயத்ரி மந்திரம் பலன்கள்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Indrakshi stotram in Tamil. It is also called as Indrakshi mantra in Tamil or Indrakshi slokam in Tamil or Selvam peruga manthiram in Tamil or Noigal theera manthiram in Tamil.