இப்போதுள்ள குழந்தைகள் எல்லாம் ஸ்நாக்ஸ் என்றால் பாக்கெட்டுகளில் அடைத்த உணவுகள், சாக்லேட்டுகள், பேக்கரி உணவுகள், இவைகள் தான் . இது அத்தனையுமே உடலுக்கு கேடு விளைவிப்பை தான். முன்பெல்லாம் ஸ்நாக்ஸ் என்றால் கடலை மிட்டாய், இஞ்சி மரப்பா,எள்ளுருண்டை இப்படியான ஸ்நாக்ஸ் தான் கொடுப்பார்கள். இது உடலுக்கும் நல்லது இதற்கு காசும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் இப்போதெல்லாம் பணத்தை கொடுத்து நோயை விலை கொடுத்து வாங்கி வைத்துக் கொள்கிறோம். இந்த நிலை மாற எல்லா வகை ஸ்நாக்ஸ்கும் கடைகளில் வாங்காமல் எதாவது உடலுக்கு ஆரோக்கியமான ஒன்று, இரண்டு ஸ்நாக்ஸ் வகைகளையாவது நாம் வீட்டில் குழந்தைகளின் ஆரோக்கியம் கருதி செய்து கொடுக்க வேண்டும். அந்த வகையில் இந்த இஞ்சி மிட்டாய் அதன் காட்டம் இல்லாமல் சற்று இனிப்பு தூக்கலாக வெல்லம் சேர்த்து ஒரு சாக்லேட் வடிவில் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி செய்து எப்படிகொடுப்பது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் : இஞ்சி -100 கிராம்,பாவு வெல்லம் – 400 கிராம், உப்பு -1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், மிளகு -1/2 டீஸ்பூன், நெய் 1/2 டீஸ்பூன், சுகர் பவுடர் -2 டேபிள் ஸ்பூன்.
முதலில் இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து தோல் நீக்கி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மண் தூசு எதுவும் இல்லாமல் இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது நறுக்கி வைத்த இஞ்சி துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை எந்த அளவுக்கு பைன் பேஸ்ட்டாக அரைக்க முடியுமோ அந்த அளவுக்கு அரைத்து கொள்ளுங்கள். அப்போது தான் இந்த இஞ்சி மிட்டாய் செய்ய பதம் சரியாக இருக்கும்.
அடுப்பை பற்ற வைத்து ஒரு அடி கனமான பேனை வைத்து பேன் சூடான உடன் அரைத்து வைத்த இஞ்சி பேஸ்ட்டை அதில் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள். பச்சை வாடை போன பிறகு அதில் வெல்லம் சேர்த்து கொள்ளுங்கள். வெல்லம் நல்ல சுத்தமான வெல்லமாக இருக்க வேண்டும். இந்த வெள்ளத்தை தூள் செய்து அதில் சேர்த்து நன்றாக பிறகு கலந்து கொண்டே இருக்க வேண்டும். அது ஒரு ரிப்பன் போல வரும் அளவிற்கு நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள் , நெய், அனைத்தையும் சேர்த்த பிறகு இன்னும் ஒரு ஐந்து நிமிடம் இவை எல்லாம் அதில் நன்றாக கலக்கும் படி கலந்து விட்டு பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.
அடுத்து ஒரு பட்டர் பேப்பரை விரித்து அதில் இந்த இஞ்சி வெல்ல கலவை ஒரு ஸ்பூன் வைத்து எடுத்து அதில் சின்ன சின்ன மிட்டாய் போல ஊற்றி விடுங்கள். சூடாக இருக்கும் போதே ஊற்றி விடுங்கள். ஆறி விட்டால் இதை போல் எடுத்து ஊற்ற வராது. எனவே இந்த வெல்ல கரைசல் சூடாக இருக்கும் போதே பட்டர் பேப்பரில் ஊற்றி வைத்து விட்டுங்கள். இது இரண்டு மணி நேரம் அப்படியே விட்டால் போதும் நன்றாக இறுகி அப்படியே மிட்டாய் பதத்திற்கு வந்து விடும்.
இதற்கு மேல் நீங்கள் சுகர் பவுடரை தூவி இந்த இஞ்சி மிட்டாயை ஒரு பாக்ஸில் போட்டு ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் கேட்கும் போது இதை கொடுத்து பாருங்கள் மறுபடியும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அது மட்டும் இன்றி எது உடலுக்கும் மிகவும் நல்லது.
இந்த முறையில் பாகு எடுக்கும் வேலை இல்லை மிகவும் எளிமையாக செய்து விடலாம். உங்க குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும் செய்து கொடுத்து பாருங்கள்.