இட்லி தோசைக்கு ஒரு முறை இந்த இஞ்சி, தக்காளி கார சட்னியை செஞ்சு பாருங்க. இஞ்சி வாடையே பிடிக்காதவங்க கூட இன்னும் கொஞ்சம் சட்னி இருந்தால் தாங்கன்னு கேட்பாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்.

Inji Tomato Chuntey
- Advertisement -

இட்லி தோசைக்கு சைடிஷ் ஆக சட்னி சாம்பார், குருமா என வகை வகையாக செய்து கொடுக்கலாம். ஆனால் அப்படி நாம் செய்யும் உணவில் நம் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு செய்ய வேண்டும். இந்த சமையல் குறிப்பு பதிவில் ரொம்பவே சுவையான அதே நேரத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக் கூடிய இஞ்சி வைத்து நல்ல ஒரு காரசாரமான சட்னி எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த சட்னி செய்வதற்கு முதலில் அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் ஐந்து காய்ந்த மிளகாய், ஐந்து காஷ்மீரி மிளகாய் சேர்த்து கருகி விடாமல் லேசாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு ஒரு விரல் நீள அளவு இஞ்சி எடுத்து தோல் சீவி சின்ன துண்டுகளாக நறுக்கி அதையும் இந்த எண்ணெயில் வதக்கி எடுத்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் இஞ்சியின் வாடை வராது. அதே நேரத்தில் அதன் காரத் தன்மையும் அடங்கி விடும். இதனால் குழந்தைகள் கூட இஞ்சியை ஒதுக்காமல் சாப்பிடுவார்கள்.

அடுத்து இதே கடாயில் ஒரு பெரிய வெங்காயத்தை கொஞ்சம் நீளமான துண்டுகளாக நறுக்கி சேர்த்து கண்ணாடி பதம் வரை வதக்கி விடுங்கள். அதன் பிறகு மூன்று பழுத்த தக்காளியை எடுத்து அதையும் பெரிதாக நறுக்கி இதில் சேர்த்து தக்காளியை முழுவதுமாக வதக்கிய பின் அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இதை ஒரு தட்டில் கொட்டி அப்படியே ஆற வைத்து அதன் பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து இந்த சட்னிக்கு தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அதிக பைன் பேஸ்ட்டாக இல்லாமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிய பிறகு, கடுகு உளுந்து சேர்த்து பொரிந்தவுடன் ஒரு காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு, அந்த தாளிப்பை இந்த சட்னியில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். சுவையான இஞ்சி தக்காளி கார சட்னி தயார்.

இதையும் படிக்கலாமே: உடல் எடை ஏறிக்கொண்டே போகிறதா? அரிசியே சேர்க்காமல் சூப்பரான டேஸ்டில் ஒருமுறை கொள்ளு தோசை செய்து சாப்பிட்டு பாருங்க. உடல் கொழுப்பையும் எடையையும் இது குறைக்க வல்லது

இந்த சட்னி இட்லி, தோசை பொங்கல் போன்றவற்றில் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும். அடை வகைகளுக்கு இந்த சட்னி ரொம்பவே பிரமாதமாக இருக்கும். நீங்களும் ஒருமுறை இந்த மாதிரி செஞ்சு பாருங்க .

- Advertisement -