கோவிலுக்குள் சென்று சாமி கும்பிடும் போது கொட்டாவி வருகிறதா? அப்போது நிச்சயம் உங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் இவை தான் அதற்கு காரணமாக இருக்கும்.

kovil
- Advertisement -

வேலை பளுவின் காரணமாக உடல் அசதியாக இருக்கும் பொழுதும், சரியான தூக்கம் இல்லாமல் இருக்கும் பொழுதும் கொட்டாவி வருவதென்பது இயல்பான விஷயமே. அவ்வாறு தொலை தூரம் பயணிக்கும் பொழுது, வெகு நேரம் படிக்கும் பொழுது, வேலை செய்யும் பொழுது இவ்வாறான நேரங்களில் உடல் சோர்வு காரணமாக கொட்டாவி வருவதென்பதும் இயற்கையான விஷயமாகும். அவ்வாறு இல்லாமல் நல்ல சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்திலும் கோவிலுக்குள் செல்லும் பொழுது கொட்டாவி வருவதென்பது பலருக்கும் புரியாத அசாதாரண விஷயமாக இருக்கிறது. இதற்கான சரியான காரணம் என்னவென்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

Govt job

காலையில் எழுந்து குளித்துவிட்டு சுறுசுறுப்பாக நல்ல உற்சாகத்துடன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் நேரத்தில் சரியாக சிலருக்கு தொடர்ந்து கொட்டாவி வந்து கொண்டே இருக்கும். இவ்வாறு கொட்டாவி வருவதற்கு காரணம் கோவிலில் நிறைந்திருக்கும் நேர்மறை சக்திகள் உடலுக்குள் சென்று நமது உடலுக்குள் இருக்கும் எதிர்மறை சக்திகளை வெளியேற்றுவது தான் இதற்கான முக்கிய காரணமாகும். கொட்டாவி என்றாலே கெட்ட ஆவி என்றுதான் பொருள்படும். நமது உடலுக்குள் இருக்கும் கெட்ட ஆவிகளை கோவிலுக்குள் இருக்கும் நேர்மறை சக்திகள் அழித்து நமது உடலிலிருந்து வெளியேற்றுகின்றன.

- Advertisement -

இவ்வாறு கெட்ட ஆவி என்று சொல்வதால் பயப்பட வேண்டிய அவசியம் என்று எதுவுமில்லை. ஆனால் இவை நமது உடலுக்குள் இருப்பதால் பல நன்மை தரும் காரியங்கள் தடைபட்டுக் கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் சோதனைகள் வந்து கொண்டே இருக்கும். கண் திருஷ்டியினால் ஏற்படும் தாக்கத்தினால் நமது உடலில் உண்டாகும் எதிர்மறை சக்திகள் தான் கெட்ட ஆவி என்று சொல்லப்படுகிறது.

marriage
Marriage matching

இவ்வாறு கண் திருஷ்டியினால் உண்டாகும் எதிர் மறை சக்திகளை அழிக்க நாம் முறையான பரிகாரத்தை செய்ய வேண்டும். அதற்காக எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து ஒரு பாதியில் மஞ்சளையும், மறு பாதியில் குங்குமத்தையும் பூசி எப்பொழுதும் வீட்டு வாசலில் இருபுறங்களிலும் வைக்க வேண்டும். பிறகு நிலை வாசற்படியில் எப்பொழுதும் எலுமிச்சை பழத்துடன் 5 பச்சைமிளகாய், ஒரு கரித்துண்டு சேர்த்து கட்டி நிலை வாசற் படிக்கு மேலே தொங்கவிட வேண்டும்.

- Advertisement -

பிறகு வாரம் ஒரு முறை வீட்டில் உள்ளவர்களை கிழக்கு முகமாக நிற்க வைத்து, சிறிதளவு கல்லுப்பை இடது கையில் எடுத்துக் கொண்டு வீட்டையும், வீட்டில் உள்ளவர்களையும் சுற்றி போட வேண்டும். இவ்வாறு செய்வதால் நமக்கு தீங்கு அளிக்கக்கூடிய எதிர்மறை சக்திகளை நம்மிடமிருந்து வெளியேற்ற முடியும். இவ்வாறு கண்திருஷ்டிகாண பரிகாரத்தை முறையாக செய்து வந்தாலே நம்மிடம் இருக்கும் தீய சக்திகள் வெளியேறி கோவிலுக்கு செல்லும் பொழுது கொட்டாவி வருவதென்பது நின்றுவிடும்.

drishti1

அதுமட்டுமல்லாமல் கோவிலுக்குள் செல்லும் பொழுது கொட்டாவி வந்தது என்றால் நமது வாய் வழியாக வரும் மூச்சுக்காற்று கடவுள் மீதும், விக்ரகத்தின் மீதும் பட்டு விடக் கூடாது. அவ்வாறு படுவது நமக்கு பெரும் கஷ்டத்தை கொடுத்து விடும். நமது உடலில் இருந்து வெளியேறும் கெட்ட ஆவிகள் மற்றவர்கள் மீதும் நமக்கு முன்னிருக்கும் கடவுள்மீதும் படாத அளவிற்கு ஒரு கைக்குட்டை அல்லது துண்டை பயன்படுத்தி வாயை மூடிக்கொள்ள வேண்டும். இனிமேல் நீங்களும் கோவிலுக்கு செல்லும் பொழுது உங்களுக்கும் கொட்டாவி வருகிறதா? இல்லையா? என்பதை கவனித்து பார்த்து இந்த பரிகாரங்களை முறையாக செய்து, நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டி இந்த பதிவை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -