ஃபிரிட்ஜில் தோசை மாவு இல்லையா? இனி கவலை இல்லை. வெறும் அரிசிமாவு இருந்தால் போதும். 10 நிமிடத்தில் இந்த பேப்பர் ரோஸ்ட் தோசையை ரெடி பண்ணிடலாம்.

dosa

கஷ்டப்பட்டு அரிசியை ஊற வைத்து, உளுந்தை ஊற வைத்து, மாவை புளிக்க வைத்து அதன் பின்பு தோசை சுட்டால் தான் பேப்பர் ரோஸ்ட் மொறுமொறுவென்று சுவையாக வரும் என்று இல்லை. அரிசி மாவை வைத்து இந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கும் அளவுகளோடு இப்படி தோசையை சுட்டு பாருங்கள். சூப்பர் தோசை உங்களுக்கு சட்டென கிடைத்துவிடும். உடனடி அரிசி மாவு தோசை எப்படி செய்வது என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோமா? இந்த பதிவின் இறுதியில், 10 நிமிடத்தில் சூப்பர் ‘தக்காளி கருவேப்பிலை சட்னி’ ரெசிபியும் உங்களுக்காக!

arisimavu

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் அரிசி மாவு – 1 கப், வேக வைத்த சாதம் – 1/2 கப், கடலைமாவு – 2 டேபிள்ஸ்பூன், தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது நிறைய தண்ணீர் ஊற்றி விட வேண்டாம். தோசைக்கு எப்படி மாவை அரைப்போமா அந்த அளவிற்கு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமான அரிசிமாவு என்றால் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். கொழுக்கட்டை மாவு இடியாப்பம் மாவு இப்படி ஏதாவது வைத்திருந்தால் அதை இலேசாக வறுத்து விட்டு அதன் பின்பு மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி, சோடா உப்பு – 2 சிட்டிகை, எலுமிச்சை பழ சாறு – 2 ஸ்பூன் அளவு ஊற்றி நன்றாக கலந்து தோசை கல்லில் தோசை வார்க்க வேண்டியதுதான். தோசை ஊற்றி தேய்ந்து, தேவையான நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மொறுமொறுவென வேகவைத்து எடுக்கவேண்டும். ஹோட்டல் தோசை போல் திருப்பிப் போடாமல் கூட இந்த தோசையை சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சரி, இந்த தோசைக்கு தோதாக காரசாரமான ஒரு தக்காளி கருவேப்பிலை சட்னி எப்படி செய்வது என்பதையும் இப்போது தெரிந்து கொள்வோம். ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 – டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், உளுந்து – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு, பூண்டு – 4 பல், சீரகம் – 1 ஸ்பூன், வர மிளகாய் – 4, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.

dosai

இந்த பொருள்கள் அனைத்தும் சிவந்ததும் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து கறிவேப்பிலையை எண்ணெயில் பொரியும் அளவிற்கு 30 வினாடிகள் வறுத்தால் மட்டும் போதும். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 4 தக்காளி பழங்களை சேர்த்து, தேவையான அளவு உப்பை தூவி, நன்றாக வதக்கி மூடி போட்டு ஏழிலிருந்து பத்து நிமிடங்கள் தக்காளியை நன்றாக வேக விடுங்கள்.

thakkali-thokku2

இடையிடையே மூடியை திறந்து கிளறி விட வேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள். இந்த விழுதை நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்தால் போதும். சூப்பரான சட்னி தயார்.

thakkali-thokku1

தேவைப்பட்டால் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, தாளித்து இதில் போட்டு மேலே சொன்ன தோசைக்கு சைட் டிஷ் ஆக பரிமாறிக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் இட்லி சப்பாத்தி, இவைகளுக்கு நல்ல சைட் டிஷ் ஆகவும் இந்த தக்காளி சட்னி இருக்கும்.

இதையும் படிக்கலாமே
அரிப்பை உண்டாக்கும் சேற்றுப் புண்ணை அலட்சியம் செய்தால் ஆபத்து! வீட்டில் இருக்கும் 2 பொருளை வைத்து ஒரே நாளில் குணப்படுத்துவது எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.