கடையில் விற்கும் ரெடிமேட் பஜ்ஜி போண்டா மாவை நம்முடைய வீட்டில் கூட அரைக்கலாமா? அதுவும் இவ்வளவு ஈஸியா? அரைத்த மாவு, 3 மாதத்துக்கு கெட்டுப்போகாது. நினைத்த நேரத்தில் பஜ்ஜி போடலாம்.

bajji
- Advertisement -

பஜ்ஜி போண்டா மாவு கடைகளில் ரெடிமேட் ஆக விற்கின்றது. ஆனால், அந்த பஜ்ஜி போண்டா மாவை நம்முடைய வீட்டிலேயே, நம் கையாலேயே அதே பக்குவத்தில் அரைக்கலாம். அது எப்படி அரைப்பது என்ற ரெசிபி உங்களுக்கு வேணுமா. இதோ இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மாவை ஆரோக்கியமான முறையில் இப்படி அரைத்து எடுத்து டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்துவிட்டால், மூன்று மாதத்திற்கு கவலையே கிடையாது. தேவைப்படும்போது இந்த மாவை எடுத்து பஜ்ஜி சுட்டுக் கொள்ளலாம். ஈவினிங் ஸ்நாக்ஸ் பிரச்சனை முடிந்தது. வாங்க ரெசிபியை பார்ப்போம்.

செய்முறை

எல்லா பொருட்களையும் அளப்பதற்கு 1 டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி – 1 டம்ளர், கடலைப்பருப்பு – 4 டம்ளர், நன்றாக காய வைத்த பூண்டு பல் – 1 கைப்பிடி அளவு, சோம்பு – 1 ஸ்பூன், பெருங்காயம் – 3 ஸ்பூன், ஓமம் – 1 ஸ்பூன், வர மிளகாய் – 100 கிராம், உப்பு தேவையான அளவு வறுத்து இதில் போடவும். பேக்கிங் சோடா -1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் ஈரம் இல்லாத ஒரு டப்பாவில் கொட்டிக் கொள்ளவும். (நம்முடைய வீட்டில் அளப்பதற்கு ஒரு ஆழாக்கு வைத்திருப்போம் அல்லவா, அதிலேயே இதையெல்லாம் அளந்து கொண்டால் சரியாக இருக்கும்.)

- Advertisement -

பூண்டை லேசாக இடித்து வெயிலில் நன்றாக காய வைத்து போட வேண்டும். அதேபோல நாம் இதில் சேர்த்து இருக்கும் கடலைப்பருப்பு மற்ற மசாலா பொருட்களில் எல்லாம் ஈரம் இருக்கக் கூடாது. தேவைப்பட்டால் எல்லா பொருட்களையும் தாம்பூங தட்டில் கொட்டி 2 மணி நேரம் நல்ல வெயிலில் காய வைத்து கொள்ளவும். (இதில் பட்டாணி பருப்பு சேர்க்கக்கூடாது. கடலை பருப்பாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.)

இதில் நாம் கலர் கூட சேர்க்கவில்லை. நம் கைப்பட அரைக்க கூடிய ஆரோக்கியமான பஜ்ஜி போண்டா மாவு. ஆப்ப சோடா மாவு சேர்த்து இருக்கின்றோம். ஆனால் அந்த ஆப்ப சோடா மாவு சேர்த்தால் தான் பஜ்ஜி புசுபுசுவென பொங்கி நமக்கு கிடைக்கும். (நீங்கள் விருப்பப்பட்டால் இதில் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

சரி, இப்போது சேர்த்த இந்த எல்லா பொருட்களையும் ஒன்றாக ரைஸ்மிலில் கொடுத்து நைசாக அரைத்து வரவேண்டும். அவ்வளவு தான். மனக்க மனக்க பஜ்ஜி போண்டா மிக்ஸ் தயார். கேழ்வரகு மாவு போட்டு இருந்தால் மட்டும் ரைஸ்மிலில் சொல்லி விடுங்கள். கேழ்வரகு மாவு போட்டு அரைத்த பின்பு இந்த மாவை போட்டு அரைக்க கூடாது என்று.

இதையும் படிக்கலாமே: ரொம்ப ரொம்ப ஈஸியா டக்குனு கார சட்னியை இப்படியும் செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட நாஊரும் சுவையில் மதுரை கார சட்னி ஸ்பெஷல்.

அரைத்து வந்த இந்த மாவை நன்றாக சலித்து ஆறவைத்து ஒரு டப்பாவில் காற்று புகாமல் ஸ்டோர் செய்ய வேண்டும். இதில் எப்படி பஜ்ஜி செய்வது. தேவையான அளவு மாவை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி கொஞ்சம் திக்காக கரைத்து, வாழைக்காய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, முட்டை பஜ்ஜி, வெங்காய பக்கோடா இப்படி எது தேவை என்றாலும் போட்டுக் கொள்ளலாம். சூப்பரான சுவையில் இருக்கும். ரெசிபி பிடிச்சவங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -