ரொம்ப ரொம்ப ஈஸியா டக்குனு கார சட்னியை இப்படியும் செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட நாஊரும் சுவையில் மதுரை கார சட்னி ஸ்பெஷல்.

- Advertisement -

காரச் சட்னி என்று சொன்னதுமே சில பேருக்கு நாக்கில் எச்சில் ஊற தொடங்கி விடும். அதிலும் மதுரை ஸ்பெஷல் கார சட்னி என்றால் சொல்லவே தேவை கிடையாது. இப்படிப்பட்ட ருசி தரும் காரச் சட்னி எல்லாம் எல்லா நேரங்களிலும் நம்க்கு கிடைக்காது. ஒரு சில சமயங்களில் இப்படி கார சட்னியை சாப்பிடும் போது, அந்த ருசி நாக்கில் அப்படியே ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒரு ஸ்பெஷல் கார சட்னி ரெசிபியை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். மதுரையில் இந்த கார சட்னி பிரபல்யமாக செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்முறை

இதற்கு முதலில் முக்கியமாக நமக்கு தேவைப்படும் பொருள் சின்ன வெங்காயம். 100 கிராம் சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தோல் உரித்த சின்ன வெங்காயம் – 100 கிராம், பெரிய சைஸில் பழுத்த தக்காளி – 2, தோல் உரித்த பெரிய பூண்டு பல் – 10, வரமிளகாய் – 4, காஸ்மீரி மிளகாய் – 3, புளி – சின்ன கோலிக் குண்டு அளவு, வெள்ளம் – சின்ன துண்டு இரண்டு, உப்பு – தேவையான அளவு, போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் இதை முதலில் அரைத்துக் கொள்ளவும். பிறகு 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி இதை விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த சட்னி அப்படியே இருக்கட்டும்.

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து 4 டேபிள் ஸ்பூன் – நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை, தாளித்துக் கொள்ளவும். இதில் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். சட்னி ஒரு கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு இதற்கு மேலே ஒரு தட்டு போட்டு மூடி விடுங்கள்.

- Advertisement -

ஐந்து நிமிடம் சட்னி கொதித்து லேசாக திக்காகி வரும்போது அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான். சூப்பரான கார சட்னி தயார். இந்த சட்னியை சுடச்சுட இட்லிக்கு வைத்து சாப்பிட்டால் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்தால் இரண்டு நாட்கள் வரை இந்த சட்னி கெட்டுப் போகாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: ஹோட்டல் சரவணபவன் ஸ்டைலில் வெள்ளை வெளீர்ன்னு தேங்காய் சட்னி அரைக்க இந்த ஒரு சீக்ரெட் இன்கிரிடியன்ஸ் மட்டும் சேர்த்தால் போதும். அப்படியே ஹோட்டல் சுவைல மணக்க மணக்க தேங்காய் சட்னி ரெடியாகிடும்.

தேவைப்பட்டால் இந்த கார சட்னி உடன் ஒரு தேங்காய் சட்னி அரைத்து பரிமாறினால் வேற லெவல் டேஸ்ட்ங்க. சொல்லும்போதே சில பேருக்கு நாவில் எச்சில் ஊற தொடங்கி விடும். உங்க வீட்ல காஷ்மீரி சில்லி இல்லை என்றால் வெறும் வரமிளகாயை வைத்து இந்த சட்னியை அரைக்கலாம். காஷ்மீரி சில்லி வைக்கும் போது இதனுடைய நிறம் நல்ல சிவப்பு நிறமாக நமக்கு கிடைக்கும் அவ்வளவுதான். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -