இந்த போண்டா செய்ய தனியாக மாவு கூட அரைக்க வேண்டாம். 5 நிமிடத்தில், உடனடி போண்டா, உடனடி சட்னி, அதுவும் செட்டிநாடு ஸ்டைலில் எப்படி செய்வது?

bonda
- Advertisement -

ஈவ்னிங் ஸ்னாக்ஸூக்கு வீட்டில் எதுவுமே இல்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் அரைத்து வைத்திருக்கும் இட்லி மாவு போதும். ரொம்பவும் புளிக்காத இட்லி மாவை வைத்து, போண்டா செய்து விடலாம். வதக்காமல், கஷ்டப்படாமல் உடனடியாக ஒரு கார சட்னியை தயார் செய்துவிடலாம். இந்த போண்டாவிற்கும், காரச்சட்னிக்கும் அப்படி ஒரு காம்பினேஷன் இருக்கும். சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊறும் அளவிற்கு சட்னியின் சுவை சூப்பரா இருக்கும். சரி, இந்த சிம்பிள் டிஷ், சிம்பிளா எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

idli-mavu

போண்டா செய்முறை:
கெட்டியான இட்லி மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 1, மிளகு -4, சீரகம் – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை, ஒரு சிட்டிகை பெருங்காயம். இட்லி மாவில் தேவையான அளவு உப்பு இருந்தால் வெங்காயத்திற்கு மட்டும் ஒரு சிட்டிகை உப்பு, சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லை குறைவான உப்பு தேவை என்றால், இட்லி மாவில் இருக்கும் உப்பே போதும்.

- Advertisement -

இதை நன்றாக கலந்தவுடன் மாவு கொஞ்சம் தண்ணீர் விட்ட பதத்திற்கு வரும். அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு, ரவை சேர்த்துக்கொள்ளலாம். அல்லது கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளலாம். ரவை, கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு இதில் உங்களுக்கு எது தேவையோ, உங்கள் வீட்டில் எது இருக்கின்றதோ அதை 2 ஸ்பூன் அளவு சேர்த்து பாருங்கள். மாவு, போண்டா விடும் பதத்திற்கு வரவேண்டும். ரொம்பவும் கட்டியாகவோ இருக்கக் கூடாது. ரொம்பவும் தனியாகவும் இருக்கக் கூடாது.

bonda1

அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் நன்றாக சூடு படித்துவிட்டு, அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு அதன் பின்பு சிறிய சிறிய உருண்டைகளாக, மாவை கிள்ளி விட்டு, போண்டாக்களை பொன்னிறமாக வந்தவுடன் எடுக்க வேண்டியதுதான். சூப்பர் போட்டா தயார்.

- Advertisement -

செட்டிநாடு ஸ்டைல் கார சட்னி செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் வர மிளகாய் – 5, பூண்டு – 5 பல், புளி – 1 சின்ன துண்டு, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 7, பெரிய பழுத்த தக்காளி – 1, தேவையான அளவு உப்பு, இவைகளை ஒன்றாக சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸி ஜார்லிருந்து, சட்னியை ஒரு சின்ன கிண்ணத்தில் மாற்றி தாளிப்பு கரண்டியை வைத்து, 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கொட்டிவிட வேண்டும். அவ்வளவுதான். சுருக்குன்னு காரணத்தோடு, செட்டிநாட்டு ஸ்டைல ஒரு கார சட்னி ரெடி.

bonda2

இந்தப்பக்கம் சுடச்சுட போண்டா, அந்தப்பக்கம் சுவையான கார சட்னி. செம காம்பினேஷன். சுட சுட டீயோ காபியோ ஒரு கப்ல வெச்சுக்கோங்க! நாளைக்கு இந்த போண்டா சட்னியுடன், ஈவ்னிங் டைம் ஸ்பென் பண்ணி பாருங்களே! மனசுக்கு திருப்தியா இருக்கும். வயிறும் நிறைந்து இருக்கும்.

இதையும் படிக்கலாமே
6 மாதங்கள் வரை தேங்காயைக் கெட்டுப் போகாமல், பாதுகாத்து வைக்க முடியுமா? அது எப்படி? பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு கூட சின்ன சின்ன டிப்ஸ்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -