அரிசி உளுந்து அரைக்காமல் கூட இப்படி ஒரு தோசையை முறுகலாக பத்தே நிமிடத்தில் சுட முடியுமே! ரெசிபி தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கா?

dosai
- Advertisement -

இட்லி தோசை மாவு இல்லாத சமயத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தோசை இல்லாமல் ரொம்பவும் கஷ்டமாக இருக்கும். கட்டாயமாக கடையில் போய் அரைத்த மாவு தான் வாங்கி வருவோம். ஆனால், தோசை மாவு பிரிட்ஜில் இல்லாத சமயத்தில் கூட மொறுமொறு தோசையை இன்ஸ்டன்டாக செய்ய ஒரு ஐடியா உள்ளது. அந்த புது ஐடியாவை ரெமிடியாக இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாங்க இன்ட்ரஸ்டிங்கான அந்த ரெமிடியை எல்லோரும் மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கலாம்.

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ரவை 1 கப், கோதுமை மாவு 1 டேபிள் ஸ்பூன், கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், போட்டு நைசாக அரைக்கவும். ரவையை ரொம்பவும் நைசாக நம்மால் அரைக்க முடியாது. எவ்வளவு தூரம் இந்த மாவையை அரைக்க முடியுமோ அரைத்து கொள்ளவும். கையில் எடுத்து பார்க்கும்போது கொஞ்சம் லேசாக கொரகொரப்பு இந்த மாவில் தெரிய தான் செய்யும். அரைத்த இந்த மாவை ஒரு அகலமான பவுலில் கொட்டிக் கொள்ளவும்.

- Advertisement -

இதோடு தேவையான அளவு உப்பு, 1 கப் அளவு லேசாக புளித்த தயிர், ஊற்றி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும். (ரவை எடுத்த கப்பிலேயே தயிரை அளந்து கொள்ளவும்.) கொஞ்சம் திக்காகவே இந்த மாவை கரைத்து ஒரு மூடி போட்டு 15 நிமிடங்கள் ஊற வையுங்கள். அப்போதுதான் ரவை தண்ணீரில் ஊறி நல்ல மாவு பதத்திற்கு வரும்.

மாவு பத்து நிமிடம் ஊறிய பின்பு இந்த மாவு இன்னும் கொஞ்சம் திக்காக மாறி இருக்கும். தேவையான அளவு தண்ணீரை ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் இதில் ஒரு சிட்டிகை ஆப்ப சோடா மாவு சேர்த்து கரைக்கவும். தோசை வார்க்கும் போது மொறுமொறுப்பாகவும் அதே சமயம் நல்ல பிரவுன் கலரில் சிவந்தும் தோசை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உங்களுக்கு ஆப்ப சோடா மாவு சேர்க்க விருப்பம் இல்லை என்றால் ஒரு 1/2 ஸ்பூன் அளவு சர்க்கரையை இதில் சேர்த்து கலந்தாலும், தோசை பிரவுன் நிறத்தில் சிவந்து வரும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். சரி இப்போது நம்மிடத்தில் மாவு தயாராக உள்ளது. அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து தோசை கல் மிதமான சூட்டில் இருக்கும் போது இந்த மாவை எடுத்து தோசை கல்லில் வார்த்து மெல்லிசாக தீட்டவும்.

இதையும் படிக்கலாமே: மதியம் மீந்த சாதத்தை வைத்து நைட்டு டின்னருக்கு நல்லா பூ போல சாஃப்ட்டான இடியாப்பத்தை சூப்பரா இப்படி ரெடி பண்ணி குடுங்க, எனக்கு உனக்குன்னு போட்டி போட்டு சாப்டுவாங்க.

அரிசி மாவு தோசை வார்ப்பது போலவே இந்த தோசை வார்த்து மேலே நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, சிவக்க விட்டி எடுத்தால் மொறு மொறு தோசை தயார். இந்த தோசையை நாம் உளுந்து அரிசி சேர்த்த தோசை மாவில் சுடவில்லை என்று அடித்து சொன்னால் கூட, யாரும் நம்ப மாட்டாங்க. அந்த அளவுக்கு ருசி இருக்கும். மிஸ் பண்ணாம உங்க வீட்ல தோசை மாவு இல்லாத சமயத்தில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு மசால், சாம்பார் சட்னி என்று உங்கள் விருப்பம் போல பரிமாறிக் கொள்ளலாம்.

- Advertisement -