மதியம் மீந்த சாதத்தை வைத்து நைட்டு டின்னருக்கு நல்லா பூ போல சாஃப்ட்டான இடியாப்பத்தை சூப்பரா இப்படி ரெடி பண்ணி குடுங்க, எனக்கு உனக்குன்னு போட்டி போட்டு சாப்டுவாங்க.

idiyappam recipe
- Advertisement -

இல்லத்தரசிகளுக்கு இருக்கக் கூடிய பெரிய கவலைகளில் ஒன்று கவலையை மதியம் வடித்த சாதம் மீதம் ஆகி விட்டால் அந்த சாதத்தை என்ன செய்வது என்று தான். இப்போதெல்லாம் அந்தந்த நேரத்திற்கு புதிதாக செய்து தான் சாப்பிடுகிறார்கள். ஒரு நேரம் சமைத்ததை அடுத்த நேரம் யாரும் சாப்பிடுவது கிடையாது. அப்படி இருக்க சாதம் மீந்து விட்டால் கண்டிப்பாக அது வீணாக தான் போய் விடுகிறது. இனி சாதம் மீந்து விட்டால் கவலையே படாம இப்படி இடியாப்பம் செஞ்சு கொடுத்திடுங்க. இந்த சமையல் குறிப்பு பதிவில் அந்த இடியாப்பத்தை எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

செய்முறை

இந்த இடியாப்பம் செய்ய ஒரு கப் அளவு சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாதம் நீர் விடாமல் இருக்க வேண்டியது முக்கியம். எனவே மதியம் மீந்த உடனே சாதத்தை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இப்போது மிக்ஸி ஜாரில் சாதத்தை சேர்த்து முதலில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளுங்கள். இதிலே முழுவதுமாக அரைந்து விட்டால் அப்படி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை ஒன்று இரண்டு சாதம் அரை யாமல் இருந்தால் லேசாக தண்ணீர் தெளித்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த சாதத்தை ஒரு பவுலுக்கு மாற்றிய பிறகு அதில் அரை ஸ்பூன் உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சாதத்தில் உப்பு சேர்த்து வடித்திருந்தால் அதற்கு ஏற்றவாறு அளவாக பார்த்து போட்டுக் கொள்ளுங்கள். இப்போது சாதத்துடன் கலக்க அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி என இரண்டில் எந்த மாவை வேண்டுமாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்போது அரைத்து வைத்திருக்கும் சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அரிசி மாவை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதை மொத்தமாக ஒரே நேரத்தில் சேர்த்து கலக்க கூடாது. கடைசியாக கொஞ்சம் கைகளில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு மாவை லேசாக பிசைந்து கொடுத்தால் இடியாப்ப மாவு பதத்திற்கு வந்து விடும்.

- Advertisement -

இந்த மாவு ஊற வேண்டும் என்ற அவசியம் கிடையாது மாவை பிசைந்த உடனே இடியாப்பம் பிழிய ஆரம்பித்து விடலாம். அதற்கு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நன்றாக கொதித்த உடன் நீங்கள் இடியாப்ப தட்டு வைத்து இருந்தால் அதில் பிழிந்து கொள்ளுங்கள். அது இல்லை எனில் இட்லி தட்டில் கூட எண்ணெய் தடவி பிழிந்து வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த ரகசிய மசாலாவை அரைத்து போட்டு உருளைக்கிழங்கு வறுவல் செஞ்சா, சமையல் ராணி பட்டம் நிச்சயம் உங்களுக்கு தான் கிடைக்கும். இந்த உருளைக்கிழங்கு வறுவல் சுவைக்கு எப்பேர்பட்ட நாக்கும் அடிமையாகிவிடும்.

இந்த இடியாப்பம் முழுக்க மீந்த சாதத்தில் செய்திருப்பதால் 5 நிமிடம் வரை வெந்தாலே போதும் சாப்டான இடியாப்பம் தயாராகி விடும். நீங்கள் சாதத்துடன் இந்த மாவை மட்டும் சேர்த்தால் போதும். இரவு உணவிற்கு நல்ல ஹெல்தியான ஒரு டின்னரை தயார் செய்து விடலாம். இனி சாதம் மீந்து விட்டதே என்று கவலைப்படாமல் சட்டுன்னு இந்த டின்னர் ரெசிப்பியை ரெடி பண்ணி கொடுத்திடுங்க.

- Advertisement -