4 பொருள் மட்டும் இருந்தா போதும் சுவையான இட்லி, தோசை பொடி இன்ஸ்டன்ட்டாக அரைத்து விடலாமே! எதுக்கு கடையில காசு கொடுத்து வாங்குறீங்க?

idli-podi4
- Advertisement -

பலருடைய இல்லங்களில் காலையில் கண்டிப்பாக இட்லி, தோசை இல்லாமல் ஆரம்பிப்பது கடினமாக இருக்கும். விதவிதமான காலை உணவுகளை தயாரிக்க எல்லோராலும் முடியாது எனவே இட்லி, தோசையை அடிக்கடி செய்து சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். இப்படி இட்லி, தோசைக்கு என்னடா சட்னி செய்வது? என்று யோசிக்கும் நேரத்தில் இட்லி பொடியை கடைக்கு போய் இனி வாங்க வேண்டாம். 4 பொருள் இருந்தா போதும் சட்டுனு இட்லி பொடி அரைத்து விடலாம். அது எப்படி அரைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இட்லி பொடி அரைக்க தேவையான பொருட்கள்:
முழு வெள்ளை உளுந்து – அரை கப், கடலை பருப்பு – அரை கப், நீட்டு வர மிளகாய் – 25, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சமையல் எண்ணெய் – இரண்டு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

இட்லி பொடி செய்முறை விளக்கம்:
முதலில் இட்லி பொடி அரைப்பதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் மட்டும் எண்ணெய் விட்டு முதலில் கடலை பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை முழு உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை தனியே ஒரு தட்டில் போட்டு ஆற விட்டு விடுங்கள்.

பிறகு அதே பேனில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல்களை போட்டு நன்கு பொன்னிறமாக, க்ரிஸ்பியாக வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் இதையும் நன்கு ஆற விட்டுவிட்டு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மிளகாய் வற்றல் மற்றும் வறுத்துள்ள பருப்பு வகைகள் எல்லாம் சேர்த்து நன்கு ஆறியதும் இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து 90% அரைபடுமாறு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும், முழுவதுமாக நைசாக அரைக்க கூடாது.

- Advertisement -

கட்டி பெருங்காயம் சேர்ப்பதாக இருந்தால், ஒரு துண்டு பெருங்காயத்தை எண்ணெயில் லேசாக வைத்து அழுத்தம் கொடுங்கள். இரண்டு புறமும் திருப்பி விட்டால் வெள்ளை நிறத்தில் வறுபடும். அதன் பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்து பாருங்கள், இது இன்னும் நல்ல ஒரு மணத்தை கொடுக்கும். இந்த இட்லி, தோசை பொடி செய்வது ரொம்ப சுலபம். நாலு பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடுவதால் வேலையும் மிச்சம், நேரமும் மிச்சம்.

இதை அடிக்கடி செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒரு முறை செய்து வைத்துவிட்டால் தேவைப்படும் பொழுது எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இதனுடன் நீங்கள் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடும் போது அவ்வளவு அருமையாக இருக்கும். இட்லி பொடிக்கு நிறைய பொருட்களை சேர்த்து பொதுவாக செய்வது உண்டு. அப்படி செய்ய நேரம் இல்லாதவர்கள், இது போல குறைந்த பொருட்களை வைத்து முதலில் முயற்சி செய்து பார்க்கலாம். இதை ஒரு காற்று புகாத டப்பாவில் அல்லது பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

- Advertisement -