- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்இன்ஸ்டன்ட் லெமன் ஜூஸ்

இன்ஸ்டன்ட் லெமன் ஜூஸ்

- Advertisement -

எல்லா சமயங்களிலும் எலுமிச்சை பிரஷ்ஷாக நம்மிடம் இருக்கும் என்று கூற முடியாது. மேலும் மொத்தமாக எலுமிச்சையை வாங்கி வைத்து ஸ்டோர் செய்யவும் முடியாது. அவ்வப்பொழுது எலுமிச்சையின் விலையும் மாறிக் கொண்டே இருக்கும். எலுமிச்சை விலை கம்மியாக இருக்கும் பொழுதே, இதை செய்து வைத்தால் அடிக்கடி ஜூஸ் போட்டு குடிப்பதற்கு வசதியாக இருக்கும். எலுமிச்சை ஜூஸ் இன்ஸ்டன்ட் ஆக எப்படி தயாரிப்பது? என்பதைத் தான் இந்த வீட்டு குறிப்பு பதிவில் காண இருக்கிறோம்.

எலுமிச்சையை ஜூஸ் போட்டு அடிக்கடி குடிப்பதால் உடலுக்கு நல்ல ஒரு சக்தி கிடைக்கும். விட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை சாறு தினமும் பருகி வர உடலில் பல்வேறு நன்மைகள் நடக்கும். எனர்ஜி மற்றும் விட்டமின் சி கொடுக்கக் கூடிய அத்தனை நன்மைகளையும் தரக் கூடிய இந்த எலுமிச்சை ஜூஸை சிரமப்படாமல் இன்ஸ்டன்ட் ஆக எப்படி தயாரிப்பது? என்னும் சீக்ரட்டை தான் காண இருக்கிறோம்.

- Advertisement -

எலுமிச்சை ஜூஸ் தயாரிப்பதற்கு தேவையான எலுமிச்சை பழங்களை கம்மியான விலையில் கிடைக்கும் பொழுதே நிறைய வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அது பிரஷ்ஷாக இருக்கும் பொழுதே ஜூஸ் போட்டு பிழிந்து எடுத்து ஒரு வடிகட்டியில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். விதைகள் இல்லாத இந்த எலுமிச்சை சாறு ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் ஒரு கப் அளவிற்கு வெள்ளை சர்க்கரையை எடுத்து ஒரு அகன்ற தாம்பூல பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.

சர்க்கரையை சேர்த்ததும் நன்கு பரப்பி விடுங்கள். சர்க்கரையின் மீது பிழிந்து எடுத்து வைத்துள்ள எலுமிச்சை சாறை ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும். சர்க்கரை எலுமிச்சைச்சாறு முழுவதுமாக உறிஞ்சி வைத்துக் கொள்ளும். இதை அப்படியே வெயிலில் நன்கு காய விட வேண்டும். நல்ல வெயில் காய்ந்தால் ஒரே நாளில் நன்கு காய்ந்து எலுமிச்சை சாறை சர்க்கரை உறிஞ்சி கொண்டு நீர் வற்றி காய்ந்து விடும். ஈரப்பதம் இல்லாமல் மொர மொரவென்று காய்ந்து வந்ததும், அதை ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து அரைத்து பவுடர் போல செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

எப்பொழுது எல்லாம் உங்களுக்கு இன்ஸ்டன்ட் ஆக ஜூஸ் தேவையோ, அப்பொழுதெல்லாம் இந்த சர்க்கரையை தண்ணீரில் கலந்து அப்படியே பருக வேண்டியது தான். எலுமிச்சை காய்ந்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் அப்படியே தான் இருக்கும். எலுமிச்சை சாறு சர்க்கரையில் ஊற்றியதும், அதை ஐஸ் வைக்கக் கூடிய ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். இதுவும் ஒரு இன்ஸ்டன்ட் லெமன் ஜூஸ் செய்ய பயன்படக் கூடிய குறிப்பு தான்.

இதையும் படிக்கலாமே:
தை அமாவாசை வழிபாட்டை தவறவிட்டவர்கள் செய்ய வேண்டியது

தேவைப்படும் பொழுதெல்லாம் ஒரு ஒரு ஐஸ் கியூப் எடுத்து தண்ணீரில் சேர்த்து அப்படியே பருகி விட வேண்டியது தான். இன்ஸ்டன்ட் ஆன முறையில் செய்யக் கூடிய இந்த லெமன் ஜூஸ் ரெசிபி, இரண்டு முறையில் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, ரொம்பவும் பயனுள்ளதாக நிச்சயம் இருக்கும். எலுமிச்சை ஜூஸ் மட்டுமல்லாமல், வாட்டர் மெலன் ஜூஸ், ஆரஞ்சு, சாத்துக்குடி ஜூஸ் என்று ஒரு சில வகையான ஜூஸ்களையும் இதே போல செய்து வைத்துக் கொண்டால் எளிமையாக ஜூஸ் போட்டு குடிக்கலாம். உடலுக்கு அடிக்கடி இன்ஸ்டன்டான எனர்ஜி கிடைக்க இது உதவி செய்யும்.

சற்று முன்