இன்ஸ்டன்ட் ரவை இட்லி மாவு, தாளிச்சு இப்படி செஞ்சு பாருங்க பஞ்சு போல மெத்துன்னு சுவையா இருக்கும்! டேஸ்டியான ரவை இட்லி 10 நிமிடத்தில் சுடுவது எப்படி?

ravai-idli-recipe
- Advertisement -

ஒரே மாதிரியான இட்லி தோசை மாவு தயாரித்து இட்லி, தோசைகளை சுட்டு சாப்பிட்டு போர் அடித்துப் போனவர்கள், இது போல இன்ஸ்டன்ட் ஆக செய்யக் கூடிய இட்லி மாவு ட்ரை பண்ணி பாருங்க! அந்த வகையில் இன்ஸ்டன்ட் ஆக ரவை இட்லி சுடுவதற்கு, ரவை இட்லி மாவு எப்படி தாளிச்சு தயார் செய்வது? சுவையான ரவை இட்லி சுலபமாக எப்படி செய்யப் போகிறோம்? என்பதை இனி இப்பதிவில் பார்ப்போம்.

ரவை இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு – அரை கைப்பிடி, கடுகு – அரை ஸ்பூன், கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு டேபிள் ஸ்பூன், ரவை – கால் கிலோ, நறுக்கிய கொத்தமல்லி தழை – 2 டேபிள் ஸ்பூன், புளிப்பில்லாத தயிர் – ஒரு கப், சமையல் சோடா – கால் டீஸ்பூன், தண்ணீர் – ஒன்னேகால் கப், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

ரவை இட்லி செய்முறை விளக்கம்:
முதலில் ரவை இட்லி செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு நான்ஸ்டிக் பேன் அல்லது வாணலி ஒன்றை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு காய விடுங்கள். நெய் இல்லை என்றால் நீங்கள் குக்கிங் ஆயில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் அரை கைப்பிடி அளவிற்கு பொடித்த முந்திரி பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்து எடுத்த முந்திரி பருப்புகளை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் எண்ணெயில் கடுகு போட்டு தாளியுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் சிவக்க வறுபட்டதும் சீரகம், ஒரு கொத்து கருவேப்பிலை, பொடிப்பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு நிமிடம் இவற்றை வதக்கிய பின்பு கால் கிலோ அளவிற்கு ரவையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். இந்த பொருட்களுடன் ரவை சேர்ந்து நன்கு உதிரி உதிரியாக பிரியும் வரை வதக்கி விடுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு இடைவிடாமல் வறுக்க வேண்டும். ஓரளவுக்கு ரவை வறுபட்டதும் பொடி பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி மீண்டும் ஒரு நிமிடம் வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை அப்படியே ஆற விட்டு விடுங்கள்.

இவை நன்கு ஆறியதும் ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். வறுத்து எடுத்துள்ள முந்திரி பருப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதிகம் புளிப்பு இல்லாத தயிர் ஒரு கப் அளவிற்கு மிக்ஸியில் நன்கு நைசாக அரைத்து சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். பின்னர் அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து விடுங்கள். இதில் ரவை ஊற ஆரம்பிக்கும் எனவே ஒரு 10 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

பிறகு பேக்கிங் சோடா சேர்த்து கால் கப் அளவிற்கு கூடுதலாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் இட்லி மாவு பதத்திற்கு கிடைக்கும். பின்னர் இந்த மாவை இன்ஸ்டன்ட் ஆக நீங்கள் இட்லி பாத்திரத்தில் ஒவ்வொரு குழிகளிலும் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஸ்டோர் செய்யக்கூடாது! இன்ஸ்டன்ட் ஆக செய்து சாப்பிட்டால் பஞ்சு போல சூப்பரான டேஸ்டில் உங்களுக்கு ரவை இட்லி கிடைக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க!

- Advertisement -