இட்லி தோசைக்கு வெறும் 5 நிமிஷத்துல இப்படி ஒரு சாம்பாரை வைத்து பாருங்கள்! குக்கரில் வெறும் 5 விசில் வரும் நேரத்தில் சுட சுட சாம்பார் தயார்.

idli-sambar
- Advertisement -

காலையில் அவசர நேரத்தில் இட்லிக்கு சுடசுட சாம்பாரை வெறும் 5 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். அதுவும் ஆரோக்கியமான பாசிப்பருப்பை வைத்து! துவரம்பருப்பை வேகவைத்து, வெங்காயம் தக்காளி வணங்கிவிட்டு, புளி கரைத்து ஊற்றி அப்பப்பா எவ்வளவு கஷ்டம். இனி இந்த பிரச்சனையே இல்லை. இந்த ரெசிபியை பாசிப்பருப்பு சாம்பார் என்றும் சொல்லலாம், அல்லது பாசிப்பருப்பு கடையல் என்றும் சொல்லலாம். கண்ணிமைக்கும் நேரத்தில் சாம்பார் ரெடி ஆயிரும். குக்கரில் 5 விசில் வந்ததும் சாம்பார் தயார். இந்த சாம்பாரை சுடச்சுட இட்லி தோசைக்கு ஊற்றி சாப்பிட்டு பாருங்க. இதன் சுவை அலாதியாக இருக்கும். சரி இப்போது அந்த ரெசிபியை பார்த்துவிடலாம்.

pasiparupu

முதலில் ஒரு பிரஷர் குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 50 கிராம் அளவு கழுவிய பாசிப்பருப்பை போட்டு கொள்ள வேண்டும். தக்காளி – 5, பச்சை மிளகாய் – 5 லிருந்து 6 காரத்திற்கு ஏற்ப, பெரிய வெங்காயம் – 1 நீள்வாக்கில் வெட்டியது, சோம்பு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, 3 1/4 லிட்டர் தண்ணீர் ஊற்றினால் இந்த சாம்பாருக்கு சரியாக இருக்கும். இந்த பொருட்கள் அனைத்தையும் மொத்தமாக பிரஷர் குக்கரில் போட்டு மேலே சொன்ன அளவில் தண்ணீரை ஊற்ற வேண்டும் அவ்வளவு தான்.

- Advertisement -

தக்காளியை உங்கள் வசதிக்கு ஏற்ப முழுசாக வெட்டாமல் போட்டுக் கொண்டாலும் சரி 2 அல்லது 4 துண்டுகளாக வெட்டிப் போட்டாலும் சரி, அது உங்களுடைய இஷ்டம். குக்கரை மூடி அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு 4 லிருந்து 5 விசில் வைத்து விட வேண்டும். அவ்வளவு தான். பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து மேலே இருக்கும் தண்ணீரை மட்டும் வடிகட்டி விட்டு, ஒரு மத்தை கொண்டு இதை லேசாக மசித்து விடுங்கள்.

இதில் நாம் சாம்பார் பொடி மிளகாய் தூள் எதுவுமே சேர்க்கவில்லை. இதில் போட்டிருக்கும் பச்சை மிளகாய் காரம் சாம்பாரில் நன்றாக இறங்க வேண்டும். தக்காளி மொத்த மொத்தமாக இருக்கும். ஆக தக்காளி பச்சை மிளகாயை அப்படியே 80 சதவிகிதம் மத்தால் நசுக்கி விட்டு ஒரு பாத்திரத்தில் சாம்பாரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதன் மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, கருவேப்பிலை தூவி கொள்ளவேண்டும். அடுத்ததாக சிறிய தாளிப்பு கரண்டியை வைத்து அதில் 1 ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், தாளித்து அப்படியே சாம்பாரில் கொட்டி கலக்கி இட்லி தோசைக்கு ஊற்றிப் பரிமாறுங்கள்.

உங்களுக்கு சாம்பார் கொஞ்சம் திக்காக வேண்டும் என்றால் பாசிப்பருப்பை கொஞ்சம் கூடுதலாகவும் சேர்த்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் பாசிப்பருப்பை வறுத்தும் இந்த சாம்பாருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அற்புதமான சுவையில் அட்டகாசமான சாம்பார். அதுவும் சுலபமாக 10 நிமிடத்தில் தயாராகிவிடும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -