இட்லி தோசைக்கு ஏற்ற ஒரு காரச் சட்னி! வித்தியாசமான முறையில் 5 நிமிடத்தில் ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க!

tomato-chutney
- Advertisement -

நம்முடைய வீட்டில் இட்லி செய்வதற்கும் தோசை செய்வதற்கும் தயாராக ஃப்ரிட்ஜில் மாவு இருக்கும். இந்த இட்லி தோசைக்கு சைட் டிஷ் ஆக என்ன செய்யலாம் என்ற குழப்பம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தினந்தோறும் வருவது தான். நம் வீட்டில் இருக்கும் 2 பொருட்களை வைத்து சுலபமான முறையில் காரசாரமான ஒரு சட்னியை நம்மால் செய்ய முடியும். வித்தியாசமான முறையில் சுலபமாக இந்த கார சட்னியை எப்படி செய்வது? நாமும் தெரிந்து கொள்வோமா? சிலபேர் இலை தக்காளி சட்னி என்றும் சொல்லுவார்கள். வெறும் 5 நிமிடம் போதும் இந்த சட்னி செய்ய. அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

tomato

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பழுத்த தக்காளி – 5, வரமிளகாய் – 3, தோலுரித்த பூண்டு – 15 லிருந்து 20 பல், தேவையான அளவு உப்பு இவைகளை போட்டு மொழுமொழுவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன் போட்டு பொரிந்தவுடன் அடுப்பை மொத்தமாக சிம்மில் வைத்து, 1 ஸ்பூன் அளவு மிளகாய்த்தூள் போட்டு, மிளகாய் தூள் கருகுவதற்கு முன்பாக, உடனேயே அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை அந்த எண்ணெயில் ஊற்றி விட வேண்டும்.

tomato-chutney1

(அந்த மிளகாய்த்தூள் கருகி விட்டால், நிச்சயம் சட்னியின் சுவை மாறி விடும். உங்களுக்கு எண்ணெயில் மிளகாய்த்தூளை போட விருப்பமில்லை என்றால், விழுதை ஊற்றி விட்டு கூட அதன் பின்பு மிளகாய் தூளை போட்டுக் கொள்ளுங்கள் தவறு கிடையாது.)

- Advertisement -

தண்ணீர் எதுவும் இந்த சட்னிக்கு சேர்க்க தேவையில்லை. நன்றாக கலந்து விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒரு மூடி போட்டு 2 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். மீண்டும் மூடியை திறந்து, நன்றாக கிளறி விட்டு, உப்பு சரி பார்த்து கொண்டு 2 லிருந்து 3 நிமிடங்கள் கொதிக்க விட்டால் போதும். மொத்தமாக 5 நிமிடத்தில் அந்த சட்னியின் பச்சை வாடை நீங்கி விடும்.

tomato-chutney2

அதன்பின்பு, சுடசுட இட்லிக்கு சைட் டிஷ்ஷாக இந்த சட்னியை பரிமாறலாம். நிஜமாகவே இந்த சட்னியை செய்வதற்கு 5 நிமிடங்கள் மட்டும் போதும் அல்லவா? ஆனால் பூண்டை மட்டும் முன்கூட்டியே உரித்து காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் போதும். சட்டென்று உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் இந்த சட்னி தயார். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
உளுந்தே இல்லாமல் மெது வடை செய்ய முடியுமா? அதுவும் 15 நிமிடத்தில்! அது எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -