10 நிமிடத்தில் இன்ஸ்டன்ட் அடை செய்வது எப்படி? தவளை அடையை விட இந்த அடையின் சுவை டாப்பு டக்கரா இருக்குங்க! மிஸ் பண்ணாதீங்க.

adai2
- Advertisement -

கஷ்டப்பட்டு மாவு அரைத்து தவளை அடை சுட்டால் கூட, சில பேருக்கு சரியாக வராது. ஆனால் இன்ஸ்டன்ட் ஆக இந்த அடையை சுட்டுப் பாருங்கள். தவளை அடையை விட சூப்பரான ஒரு சுவை கிடைக்கும். அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். சக்கரை வியாதி உள்ளவர்களும் இந்த அடையை சுட்டு சாப்பிடலாம். இந்த அடையை நாம் எதில் செய்யப் போகிறோம் தெரியுமா. கோதுமை ரவை. முழு கோதுமையையே குருணை குருணையாக உடைத்து ரவையாக, கடைகளில் கிடைக்கிறது. எல்லா டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலும் கோதுமை ரவை கிடைக்கும். அதை வாங்கி இந்த அடையை செய்யலாம்.

செய்முறை

முதலில் அகலமான ஒரு பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கப் அளவு கோதுமை ரவையை போட்டுக் கொள்ளுங்கள். 250 கிராம் கோதுமை ரவை. எந்த கப்பில் ரவையை அளந்தீர்களோ, அதை 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி ரவையை நன்றாக கலந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

- Advertisement -

15 நிமிடத்தில் ரவை தண்ணீரையெல்லாம் உறிஞ்சி சரியான பக்குவத்தில் வந்திருக்கும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழை – சிறிதளவு, இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எலுமிச்சம் பழச்சாறு – 1 ஸ்பூன் ஊற்றி, நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் 1/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி மாவை நன்றாக கலந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் கூட இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அடை மாவு திக்காகத்தான் இருக்க வேண்டும். ரொம்பவும் தண்ணீராக கரைத்து விடக்கூடாது. அடை மாவை அப்படியே அள்ளி சூடாக இருக்கும் தோசை கல்லில் வார்த்து சின்னதாக அடைபோலவே பரப்பி விட வேண்டும். கரண்டியாலையே இந்த அடையை வார்க்கலாம். அடை ஒரு பக்கம் நன்றாக வெந்து சிவந்து வந்ததும், அழுத்திவிட்டு மீண்டும் இரண்டு பக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக சிவக்க வைத்து எடுக்கவும்.

நல்லெண்ணெய் அல்லது நெய் உங்கள் விருப்பம் போல ஊற்றி இந்த அடையை சுட்டு எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறினால், சூப்பராக இருக்கும். தேவைப்பட்டால் சாம்பார் கூட சைடு டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். எதுவுமே இல்லை என்றால் வெறும் இட்லி பொடி வைத்து சாப்பிட்டாலும் அடை ருசியாக தான் இருக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: நோய் எதிர்ப்பாற்றலை அள்ளிக் கொடுக்கும் பச்சைப் பயறு தோசை மாவு எப்படி எளிதாக தயார் செய்வது? இது தெரிஞ்சா இனி இட்லி, தோசை மாவு தேடவே மாட்டிங்களே!

வீட்டில் சமைக்க எதுவுமே இல்லை என்றாலும் இன்ஸ்டன்டான நிறைவான டிபன் தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவுக்கு இந்த அடை சுவையாக இருக்கும். உங்களுக்கு இந்த கோதுமை ரவை கிடைக்கவில்லை என்றாலும் உப்புமா செய்யக்கூடிய கோதுமை ரவையை வைத்தும் இப்படி ஒரு அடையை முயற்சி செய்து பாருங்கள். அது கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

அவ்வளவுதான். பச்சை மிளகாய் சேராது என்பவர்கள், சில்லி ஃபிளக்ஸ் கூட காரத்திற்கு சேர்க்கலாம். வரமிளகாயை லேசாக வறுத்து விட்டு, மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து போட்டால், சில்லி ஃபிளக்ஸ் தயார். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாதீங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -