காலை உணவை சுவையாக்க இந்த இன்ஸ்டன்ட் ஓட்ஸ் தோசையை கொத்தமல்லி சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள்.

oats-dosai
- Advertisement -

காலையில் எழுந்தவுடன் எதை நாம் முதலில் பார்க்கிறோமோ அதன் அடிப்படையில் தான் அந்த நாள் முழுவதற்குமான பலன்கள் கிடைக்கும். அதுபோல காலையில் நாம் சாப்பிடக்கூடிய முதல் உணவு எவ்வளவு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கின்றதோ அதனை பொறுத்து தான் அந்த நாள் முழுவதும் நாம் செய்ய கூடிய வேலைகளை சிறப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செய்ய முடியும். இவ்வாறு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தையும் கொடுத்து நல்ல இப்போ சுவையுடனும் இருக்கும் இந்த ஓட்ஸ் தோசை மற்றும கொத்தமல்லி சட்னியை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

sun

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – முக்கால் கப், அரிசி மாவு – அரை கப், ரவை – கால் கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிய துண்டு, சீரகம் – ஒரு ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – 5 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதன்மீது ஒரு பேன் வைத்து, பேன் நன்றாக சூடானதும் முக்கால் கப் ஓட்ஸை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வறுத்த ஓட்ஸை மிக்ஸி ஜாரில் சேர்த்து மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காய மற்றும் பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி இவை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

oats 5

ஒரு வாயகன்ற கிண்ணத்தில் அரைத்து வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து கொண்டு அதனுடன் அரை கப் அரிசி மாவு, கால் கப் ரவை இவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அதன்பின் இதனுடன் அரை ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் சீரகம், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை இவை அனைத்தையும் சேர்த்து, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, நன்றாக கட்டிகள் இல்லாமல் கலந்து விட்டு, 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது தோசைக்கல் வைத்து, தோசைக்கல் நன்றாக காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவிலிருந்து ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை ஊற்ற வேண்டும். அதன்மீது ஒரு ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தோசை வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு புறங்களும் நன்றாக சிவந்து வருமாறு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஓட்ஸ் தோசை தயாராகிவிட்டது.

jowar-dosai3

கொத்தமல்லி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி – அரை கட்டு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, இஞ்சி – சிறிய துண்டு தேங்காய் – கால் மூடி, உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், புளி – ஒரு கொட்டை பாக்கு அளவு, பச்சை மிளகாய் – 3, உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன்.

செய்முறை:
அடுப்பின் மீது கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம் பருப்பை சேர்த்து தாளித்து அதன்பின் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் உப்பு இவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

Pudhina thokku

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் வதக்கிய பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து இந்த சட்னியில் சேர்த்து விட்டால் போதும். சுவையான கொத்தமல்லி சட்னி தயாராகிவிடும். ஓட்ஸ் தோசையுடன் இந்த கொத்தமல்லி சட்னியை சேர்த்து சாப்பிட்டு மிகவும் அருமையான சுவையில் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -