அரிசி மாவு இல்லாத நேரத்திலும் செய்யக்கூடிய இந்த உடனடி இட்லியை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாமா

wheat
- Advertisement -

இப்பொழுதெல்லாம் அனைவரது வீட்டு ஃப்ரிடஜிலும் அரிசி மாவு இல்லாமல் இருக்காது. ஏனென்றால் நினைத்த உடனேயே இட்லி தோசை செய்து கொடுக்க எப்பொழுதும் இந்த மாவு வீட்டில் இருந்திட வேண்டும். அப்படி ஒரு சில சமயங்களில் தோசை மாவு தீர்ந்து விட்டது என்றால் அவசரத்திற்கு செய்யக்கூடிய இந்த உடனடி இட்லியை சமைத்து கொடுக்கலாம். இட்லி என்று சொன்னாலே இதுவரை அரிசி மாவில் மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் சற்று வித்தியாசமாக கோதுமை மாவை வைத்து செய்யக்கூடிய இந்த இட்லியை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

idli-mavu

தேவையான பொருட்கள்:
கோதுமைமாவு – 300 கிராம், தயிர் – ஒரு கப், கடுகு – ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், பச்சைமிளகாய் – 5, காரட் – 1, உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, கடாய் சூடானதும் கோதுமை மாவை சேர்த்து சிறிது நேரம் வறுத்து கொண்டு, அதனை வேறு தட்டிற்க்கு மாற்றி ஆற வைக்க வேண்டும். அதன் பிறகு கோதுமை மாவுடன் ஒரு கப் தயிர், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். பிறகு ஒரு கேரட்டை காய் சீவலில் நன்றாக சீவி வைத்துக்கொள்ளவேண்டும்.

wheat

பின்னர் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். இவை நன்றாக சிவந்ததும் இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கேரட்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு கொத்து கொத்தமல்லி தழை தூவி ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும்.

- Advertisement -

பின்னர் இந்த கலவையை கரைத்து வைத்துள்ள கோதுமை மாவுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும் அதன்பின் ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பின் மீது வைத்து விட வேண்டும்.

frying

பிறகு ஒவ்வொரு இட்லி தட்டிலும் லேசாக எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள கோதுமை மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து இட்லிக்கு மாவு ஊற்றுவது போல ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் அனைத்து இட்லி தட்டுகளையும் இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

wheat-idli3

பத்து நிமிடம் கழித்து அனைத்து இட்லிகளையும் வெளியே எடுத்து ஒரு தட்டில் வைத்து இதனுடன் கொத்த மல்லி சட்னி, தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி இவற்றில் எதனை வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட்டோம் என்றால் அவ்வளவு அசத்தலான சுவையில் இருக்கும்.

- Advertisement -