இன்டெர்நெட்டில் பெண்களின் தேடல் எதைப்பற்றியது? புதிய சர்வே வெளியானது.

mobile-searching
- Advertisement -

நம் இந்திய பெண்களில் பெரும்பாலானோர் தங்களது தேடுதல்களை ஸ்மார்ட்போன்களில் தான் வைக்கிறார்கள். 60% பெண்கள் தேடுதலுக்கு லேப்டாப்பை விட ஸ்மார்ட்போன்களை தான் தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களில் வளர்ந்து வரும் நகரங்களில் வசிக்கும் பெண்கள் இதற்காக ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேரம் செலவிடுகிறார்கள். வளர்ச்சி அடைந்த நகரங்களில் அதைவிட 25 நிமிடங்கள் கூடுதலாக செலவிடுகிறார்கள். இவர்களில் 80 சதவீதம் பெண்கள் தம் சொந்த மொழியைக் காட்டிலும் தேடுபொறியில் ஆங்கிலத்தை தான் பயன்படுத்துகிறார்கள் என தெரிய வந்திருக்கிறது.

 mobile-searching

கடந்த வாரம் வெளியிட்ட புதிய சர்வேயின் படி இன்டர்நெட் தேடுபொறியில் நம் இந்திய பெண்களால் அதிக அளவில் தேடப்படும் தலைப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகும். இந்தியாவின் வளர்ச்சி அடைந்த நகரங்களில் இருக்கும் பெண்களில் 40% பேர் சாஃப்ட்வேர் மற்றும் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் அவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் மொழி ஆங்கிலமாக இருக்கிறது.

- Advertisement -

இது போன்ற இணைய தேடுதலினால் 40 சதவீதம் பெண்கள் சங்கட நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்களை பயமுறுத்தும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேலும் அவர்கள் முன் பின் தெரியாதவர்களால் தொடரபடுகிறார்கள். இதனால் அப்பெண்கள் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள் என்று கூறுகிறது.

google

இன்டர்நெட் தேடலுக்கு அவர்கள் பயன்படுத்தும் நேரம் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை என மொபைல் நிறுவனங்களின் சிக்னல்களை ஆராய்ந்து தெரிவித்துள்ளனர். அவர்களில் 18 முதல் 23 வயதுடைய பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தலைப்புகளை அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்கிறார்கள். 29 முதல் 35 வயது வரை உள்ள பெண்கள் ஆரோக்கியம் மற்றும் சுயமுன்னேற்றம் போன்ற தலைப்புகளை தேர்ந்தெடுக்கிறார்கள். 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் உடல் நலம் மற்றும் உடற்பயிற்சி, பெண்கள் அதிகாரம் தொடர்பான தலைப்புகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

- Advertisement -

google

இந்தியாவில் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவது வீடியோக்களில் தான். படிப்பதை விட வீடியோவாக பார்ப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் மூன்றில் ஒரு பங்கு இந்திய பெண்கள் கடந்த ஒரு மாதத்தில் சமூக மற்றும் தன்னலம் தொடர்பான வீடியோக்கள் அல்லது தொழில் வளர்ச்சி சம்பந்தப்பட்ட வீடியோக்களை அதிகம் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் கூறுகிறது.

youtube

இந்த கருத்து கணிப்பை மேற்கொண்ட வெரிசோன் மீடியாவின் தேசிய மேலாளர் நிகில் ருங்டா கூறியதாவது: இந்திய பெண்களிடையே தன்னம்பிக்கையையும், தங்களை ஊக்குவித்து கொள்ள தேவையான அம்சங்களும் உருவாக்கித் தருகிறது இந்த இன்டர்நெட் தேடல் என்கிறார். குழந்தைகள் வன்கொடுமை, சுற்றுச்சூழல் பராமரிப்பு, பெண்கள் அதிகாரம், தொழில் முன்னேற்றம் போன்ற தலைப்புகளை அதிக ஆர்வத்துடன் தேர்ந்தெடுத்து அதிக அளவில் படிக்கவும், வீடியோவாகவும் பார்க்கப்படுகிறது என்று இந்த சர்வே தெரிவித்துள்ளது.

- Advertisement -