இந்த ஆண்டு IPL போட்டிகள் நடைபெறுவது எந்த நாட்டில் ?

ipl
- Advertisement -

IPL போட்டிகள் இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பு உலகின் எந்த மூலையிலும் வேற எந்த நாட்டிற்கும் இந்தியாவில் நடைபெறுவதை போன்ற வரவேற்பு கிடைப்பதில்லை என்பது முற்றிலும் உண்மையே. அதனால் தான் வெற்றிகரமாக 11 ஆண்டுகளை நிறைவு செய்து 12 சீசன் வரை வந்துள்ளது.

ipl 1

உலகின் அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளை சேர்ந்த பிளேயர்கள் ஏலத்திற்கு விடப்பட்டு ஒவ்வொரு அணியாக மாறி விளையாடுவர். இந்த IPL போட்டிகளின் மூலம் நல்ல திறமையான வீரர்கள் உருவாகிறார்கள். இந்திய அணிக்கும் பல வீரர்கள் IPL போட்டிகளின் மூலம் கிடைத்து இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த IPL போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நாடுளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் தான் IPL போட்டிகள் வழக்கமாக நடைபெறும். தேர்தல் இந்தியாவில் நடைபெறும்போது வீரர்கள் ஒவ்வொரு மாநில நகருக்கும் சென்று போட்டிகளில் பங்கேற்பது என்பது கடினமான விடயம் எனவே 2009 ஆண்டு தென்னாப்பிரிக்காவில் அல்லது 2014 ஆம் ஆண்டு பாதி போட்டிகள் UAE மாற்றப்பட்டது. அது போன்று இந்த ஆண்டு நடைபெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் அந்த தகவலுக்காக எதிர்பார்க்கின்றனர்.

ipl 2

வீரர்கள் ஏலம் இந்த ஆண்டு முடிவுற்ற நிலையில் போட்டி நடைபெறாமல் போனால் பெரும் இழப்பு ஏற்படும். அதே போன்று இந்தியாவை தாண்டி போட்டிகள் நடந்தால் இந்தியாவில் கிடைப்பது போன்று வரவேற்பு கிடைப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் சீக்கிரம் அறிவிப்பை வெளியிடுங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கையினை தொடர்ந்து வைத்து வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

இந்த ஆட்டத்தில் நாதன் லயனிடம் நான் கற்ற பாடம் இதுதான் – அகர்வால்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -