இந்த ஆட்டத்தில் நாதன் லயனிடம் நான் கற்ற பாடம் இதுதான் – அகர்வால்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (03-01-2019) சிட்னி நகரில் துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி துவங்கியது. தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக அகர்வால் மற்றும் ராகுல் களமிறங்கினர். இறங்கிய வேகத்திலேயே 9 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார் ராகுல்.

agarwal 2

அதன் பிறகு புஜாராவுடன் கைகோர்த்த அகர்வால் சிறப்பாக விளையாடி 77 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் அகர்வாலின் இது போன்ற ஆட்டம் மிக சிறப்பானது. தனது விக்கெட்டினை பறிகொடுத்த அகர்வால் பின்னர் அவர் அளித்த பேட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் லயன் பற்றி அகர்வால் கூறியிருப்பதாவது :

- Advertisement -

நான் ஆரம்பத்தில் சிறப்பாகவே இன்னிங்க்ஸை ஆரம்பித்தேன் அரைசதத்தினையும் கடந்தேன். பிறகு நாதன் லயன் பந்துவீச வரும்போது அவருக்கு எதிராக எனது ஆதிக்கத்தை செலுத்த விரும்பினேன். அது தவறாக முடிந்தது. இறுதியில் என் விக்கெட்டினை அவரிடமே பறிகொடுத்தன். இந்த ஆட்டத்தில் இருந்து நான் கற்ற பாடம் என்னவென்றால் ஆதிக்கத்தை செலுத்தி அனைத்து பந்துகளையும் அடிப்பதை விட ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டலாம் என்பதே. மேலும், இந்த போட்டியில் என் விக்கெட்டினை நானே தூக்கி எரிந்தது போல உணருகிறேன் என்று கூறினார்.

agarwal

இருப்பினும் இந்திய ரசிகர்கள் அகர்வாலுக்கு ஆதரவு கொடுத்து தங்களது கருத்துக்களை வலைதளத்தில் பதிவிட்டவை :ஆஸ்திரேலிய போன்ற வெளிநாட்டு மைதானங்களில் ஒருநாள் போட்டியில் சிக்ஸர் அடிப்பதே கடினம். ஆனால், இந்த போட்டியில் லயனுக்கு எதிராக இரண்டு சிக்ஸர்களை விரட்டினார். மேலும் இவரது ஆட்டத்தின் மீது உள்ள நம்பிக்கை தான் அது போன்ற பெரிய ஷாட்களை ஆடவைக்கிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

தேநீர் இடைவெளியின் போது அம்பயரிடம் விளையாடிய கோலி – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -