IPL 2019 : சென்னையில் துவங்க உள்ள ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை ரசிகர்கள் ஆரவாரம் -டிக்கெட் விலை இவ்வளவா ?

Tiket
- Advertisement -

இந்த ஆண்டு 11ஆவது ஐ.பி.எல் போட்டிகள் துவங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டி வரும் 23ஆம் தேதி துவங்க உள்ளது. வழக்கமாக துவக்க விழா கோலாகலமாக நாடக்கும். ஆனால், இந்த ஆண்டு துவக்க விழா செலவினை புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவத்தினர் குடும்பத்திற்கு அந்த தொகையை அளிக்க நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

ipl

தற்போது சென்னையில் நடைபெற இருக்கும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டிக்கான டிக்கெட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 23ஆம் தேதி துவங்க உள்ளது. அதற்காக மார்ச் 16 ஆம் தேதி காலை 11.30 மணி முதல் மாலை 6 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது.

- Advertisement -

அதன்படி அடிப்படை விலை டிக்கெட் 1300 ரூபாய் முதல் துவங்குகிறது. அதற்கு அடுத்த அடுத்த தரத்தின் படி டிக்கெட் விலை அமையும் என்று மைதான நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு வந்தததும் சென்னை அணி ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்தபடி உள்ளனர்.

ipl 1

மேலும், புக்-மை-ஷோ என்ற மொபைல் ஆப்பின் மூலம் டிக்கெட்டினை பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணியின் ரசிகர்கள் போட்டியை காண ஆவலாக டிக்கெட் விற்பனை தேதிக்காக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Raina : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தமிழில் பாடிய சுரேஷ் ரெய்னா – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -