Raina : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தமிழில் பாடிய சுரேஷ் ரெய்னா – வைரல் வீடியோ

Raina
- Advertisement -

இந்த வருடம் 11ஆவது ஐ.பி.எல் போட்டிகள் துவங்க உள்ளன. எல்லா வருடமும் கோலாகலமாக துவங்கும் ஐ.பி.எல் போட்டிகளின் துவக்க விழா இந்த ஆண்டு நடைபெறவில்லை. புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு துவக்க விழாவுக்காக செலவு செய்ய இருந்த பணத்தை அளிக்க உள்ளது ஐ.பி.எல் நிர்வாகம்.

ipl 1

சென்ற ஆண்டு ஐ.பி.எல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியது. அதனால் ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது.இந்த முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சென்னை அணியின் வீரரான குட்டி தல சுரேஷ் ரெய்னா சென்னை அணி விளம்பரத்திற்காக தமிழில் பாடலை பாடியுள்ளார். தற்போது அவர் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக பல ஆண்டுகளாக சுரேஷ் ரெய்னா விளங்கிவருகிறார். இந்த ஆண்டும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த ரெய்னா சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படிக்கலாமே :

Rohith Sharma : ரோஹித்தின் சாதனையை பாராட்டி பி.சி.சி.ஐ போட்ட ட்வீட் – என்ன சாதனை தெரியுமா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -