இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்

Iranthavargal kanavil vanthal
- Advertisement -

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்

கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தின் பொழுது ஏற்படுவதாகும். கனவுகள் நம் மனதின் நிறைவேறாத விருப்பங்கள் பிம்பம் மனோதத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கனவுகள் குறித்து உலகெங்கும் இருந்த பண்டைய நாகரிகங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதமான கருத்தை கொண்டிருந்தன. நமது இந்திய நாட்டில் கனவுகளுக்கேற்ற பலன்கள் கூறும் கனவு சாஸ்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. பொதுவாக கனவுகளில் எது வந்தாலும் யாரும் அதை பெரிதாக பொருட்படுத்துவது கிடையாது. ஆனால் இறந்தவர்கள் கனவில் வந்தால், அது கனவு கண்டவர்களை பயம் கொள்ள செய்து விடுகிறது. அந்த வகையில் இறந்தவர்கள் கனவில் வந்தால் (Iranthavargal kanavil vanthal) ஏற்படும் பலன்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா

1) இறந்து போன ஒருவரின் தந்தை கனவில் வந்தால் தீர்க்க முடியாத பிரச்சினை விரைவில் தீர போகிறது என்று கூறப்படுகிறது.
2) இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் அவர்கள் மிகப்பெரிய பெயரும் புகழும் அடையப் போகிறார்கள் என்று கருதப்படுகிறது.
3) இறந்தவர்கள் அழுவது போல கனவு கண்டால் அது ஒரு தீய அறிகுறி. அந்த கனவு கண்டவர்கள் உடனே கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

- Advertisement -

4) இறந்தவர்கள் நம்மை ஆசீர்வதிப்பது போல கனவு கண்டால், நமக்கு வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகள் ஏற்படுவதை உணர்த்தும் அறிகுறி அது என கருதப்படுகின்றது.
5) இறந்து போனவர்களை சுமந்து கொண்டு செல்வது போன்று கனவுகள் வந்தால் நமக்கு வாழ்வில் சில தடைகள் விலகி நன்மைகள் ஏற்படும்.
6) இறந்து போன தாய் – தந்தையர் கனவில் வந்தால் கனவு கண்டவர்களுக்கு ஏற்படவிருக்கின்ற ஆபத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் என்பது பொருள்.

7) இளவயதில் இருக்கின்ற தன் மனைவி இறப்பது போல் கனவு கண்டால், அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என கனவு சாஸ்திரம் சொல்கிறது.
8) இறந்தவர்கள் உங்களுடன் சேர்ந்து உண்பது போல் கனவு கண்டால், உங்களுக்கு மிகச்சிறந்த நற்புகழும் அதனால் செல்வச் செழிப்பும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
9) இறந்தவர்கள் உங்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் இக்கட்டான சூழ்நிலைகளில் உங்களுக்கு உதவி செய்ய சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் வருவார்கள் என்பதை அது குறிக்கிறது.

  • இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் உறங்குவது போல் கனவு கண்டால், மிகப் பெரிய கண்டத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க போகிறீர்கள் என்பதை குறிப்பதாக கருதப்படுகிறது.
  • இயற்கையான முறையில் மரணம் அடைந்தவர்கள் நம் கனவில் வந்தால், நமக்கு நன்மையான பலன்கள் ஏற்படும்.
  • துர்மரணம் அடைந்தவர்கள் நமது கனவில் வந்தால் உடல்நல பாதிப்புகள், எதிர்பாரா விபத்து, வம்பு வழக்குகள், உறவுகள் பிரிதல் போன்றவை ஏற்பட போகின்றது என்பதை குறிக்கின்ற அறிகுறியாகும்.
  • குழந்தை இறந்தது போன்று கனவு கண்டால் கனவுகண்டவருக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படப் போகின்றது என்பதை குறிப்பதாகும்.
  • பேரக் குழந்தைகளை எடுத்து நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து மறைந்த பெரியவர்கள் நம் கனவில் வந்தால் அவர்கள் நமக்கு நேரிலேயே வந்து ஆசீர்வாதம் செய்வது போன்றதாக கனவு சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
  • இறந்த நபரின் சடலங்களை கனவில் கண்டால் உங்கள் வீட்டில் விரைவில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற போகின்றது என்பதை அது உணர்த்துகிறது.
  • நமக்கு வேண்டிய நபர்கள் யாரேனும் இறப்பது போல் கனவு கண்டால் அவர்களுடைய துன்பங்கள் அனைத்தும் தீரப் போவதாக பொருள்.
  • தான் இறந்து விட்டது போலவே கனவு கண்டால் வாழ்வில் நல்ல நிகழ்வுகள் நடக்கப் போகின்றன என்பதை அது குறிக்கிறது.
- Advertisement -