- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர நந்தி பகவான் வழிபாடு

பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர நந்தி பகவான் வழிபாடு

- Advertisement -

கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய குடும்பப் பிரச்சனை கோர்ட் கேஸ் வழக்கு, விவாகரத்து வரை செல்லக்கூடாது. இதை ஒரு பேச்சுக்காக கூட சொல்ல கூடாது. இருந்தாலும் இந்த குடும்ப பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள், கணவன் மனைவி பிரிந்து இருப்பவர்களுக்காக, இதை பேச வேண்டிய சூழ்நிலை.

கணவன் மனைவி பிரச்சனை என்பது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் சரியாக கூடிய ஒரு விஷயம். அதை நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பிரச்சனையை மூன்றாவது நபரிடம் கொண்டு செல்லாதீர்கள். கணவன் மனைவி பிரச்சனைக்குள் மூன்றாவது நபர் நுழையும் போது தான் பிரச்சனை பெருசாகும்.

- Advertisement -

மூன்றாவது மனிதர் என்றால், பெண்ணைப் பெற்ற தாய் தந்தையரும், கணவன் மனைவி பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்யக்கூடாது. அந்த ஆணை பெற்ற தாய் தந்தையும் கணவன் மனைவி பிரச்சனைக்கு பஞ்சாயத்துக்கு வரக்கூடாது. அப்போதுதான் ஒரு குடும்பத்தில் விரிசல் ஏற்படாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது பிரச்சினை வந்துவிட்டது.

கணவன் மனைவி பிரிய கூடிய சூழ்நிலைக்கு சென்று விட்டார்கள். என்ன செய்வது. கடைசி நேரத்தில் ஆவது இருவரும் ஒன்று சேர்ந்து விட வேண்டும், இதற்கு ஆன்மீக ரீதியாக ஏதாவது பரிகாரம் இருக்கா என்று கேட்பவர்களுக்காக இந்த அற்புதம் வாய்ந்த, சக்தி வாய்ந்த பரிகாரம்.

- Advertisement -

கணவன் மனைவி ஒன்று சேர நந்தி பகவான் வழிபாடு

பிரதோஷ நாளில் சிவன் கோவிலுக்கு சென்று, வழிபாடை செய்ய வேண்டும். பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கும் விசேஷமாக அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெறும். நந்தி பகவானுக்கு முன்பாக ஒரு சின்ன கிண்ணத்தில் பச்சரிசி மாவும், வெல்லமும் சேர்த்து கலந்து வைத்து நெய்வேத்தியம் செய்யுங்கள். நந்தி பகவானுக்கு தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்யுங்கள்.

அந்த பிரசாதத்தை எடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் விநியோகம் செய்து விடுங்கள். வழிபாடு இவ்வளவுதான். மாதம் தோறும் வரக்கூடிய இரண்டு பிரதோஷ தினத்திலும் இதை தவறாமல் செய்ய வேண்டும். சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மனைவி ஒன்றாக சேர்ந்து சென்று இந்த வழிபாட்டை மேற்கொண்டால் உங்களுக்குள் இருக்கும் சண்டை சச்சரவு விலகி அன்னியூனியம் அதிகரிக்கும்.

- Advertisement -

மனைவி மட்டும் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொண்டாலும் தவறு கிடையாது. கணவன் மட்டும் சென்று இந்த வழிபாட்டை மேற்கொண்டாலும் தவறு கிடையாது. உங்களுடைய பிரச்சனை கோர்ட் கேஸ்க்கு போயாச்சு. விவாகரத்து வரை சென்று விட்டீர்கள் என்றாலும் பரவாயில்லை. இந்த வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் உங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி நீங்கள் மீண்டும் ஒன்று சேர்வதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் கணவன் மனைவி இருவருக்குள் யாரோ ஒருவர் மனதில் ஆவது சேர வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.

திருமணமாகாத பெண்கள் ஆண்கள் இந்த பரிகாரத்தை செய்தால், உங்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும். நல்ல மணமகள், நல்ல மணமகன் அமைவார்கள். அது மட்டுமில்லாமல் உங்களுடைய இல்லற வாழ்க்கை கடைசி வரைக்கும் சந்தோஷமாக இருப்பதற்கு, உண்டான அருளாசியை நந்தி பகவான் உங்களுக்கு கொடுப்பார். இது மிக மிக எளிமையான பரிகாரம் தொடர்ந்து நம்பிக்கையோடு பிரதோஷ நாட்களில் செய்து வாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் அதிகரிக்க பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

பிரதோஷ நாளில் இந்த வழிபாட்டை செய்ய தவற விட்டால், தொடர்ந்து வரக்கூடிய திங்கட்கிழமையிலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாள். ஆகவே அந்த நாளில் சிவபெருமானை வழிபாடு செய்யும்போது, கூடவே நந்தி தேவரையும் சேர்த்து வழிபாடு செய்யும்போது, உங்களுக்கு நற்பலன்கள் நிச்சயம் கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்