- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇரவு நல்ல தூக்கம் வர எளிய வழி

இரவு நல்ல தூக்கம் வர எளிய வழி

- Advertisement -

இரவு நிம்மதியாக நல்ல தூக்கத்தை பெறுபவர்களால் மட்டும்தான், பகலில் நிம்மதியான வேலையை பார்க்க முடியும். மனநிறைவோடு நிம்மதியாக வேலை பார்த்தால் மட்டும்தான், வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். இரவு உங்களுக்கான நல்ல தூக்கம் கிடைக்கவில்லையா? மன நிம்மதியை இழந்து தவிப்பவர்கள், இந்த சுலபமான வழியை மட்டும் பின்பற்றி பாருங்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறக்கூடிய அதிர்ஷ்டசாலி உங்களை விட வேறு யாரும் இருக்க முடியாது.

தினம் தினம் படுக்கை அறைக்குப் போகும் போது, ஏதேதோ சிந்தனையோடு தான் செல்கின்றோம். மனதில் இப்போதெல்லாம் ஒரு கட்டுப்பாடு கிடையாது. குறிப்பாக கைபேசியோடு படுக்கையறைக்குள் செல்லவே கூடாது. படுக்கை அறைக்கு செல்வதற்கு முன்பு, குளியல் அறைக்கு சென்று, கை கால் முகம் கழுவிக்கொள்ள வேண்டும். கால்களை முட்டி அளவிற்கு கழுவிக் கொள்ளுங்கள். முழங்கால் முட்டி அளவு கால்களை முதலில் சுத்தம் செய்துவிட்டு, கைகளையும் முழங்கை அளவு சுத்தம் செய்துவிட்டு, முகம் கழுவி விட்டு, துடைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு பூஜை அறைக்கு செல்லுங்கள். கொஞ்சம் திருநீறு எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு, அப்பனே முருகா, ஈஸ்வரா, ராமா என்று சொல்லி, இரவு நல்ல தூக்கத்தை பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இறை நம்பிக்கையோடு, இறை உணர்வோடு, இறை சிந்தனையோடு நாளை எல்லாம் நல்லபடியாகத்தான் நடக்கும் என்ற நம்பிக்கையோடு வந்து படுத்துக்கொள்ள வேண்டும். இறை சிந்தனையோடு படுப்பவர்களுக்கு இரவு நிச்சயம் நல்ல தூக்கம் வரும்.

இதெல்லாம் ஒரு பரிகாரமா என்று நீங்கள் நினைக்கலாம். இந்த பதிவை படிக்கும் எத்தனை பேர் இதை பின்பற்றுகிறீர்கள், எத்தனை பேர் நிம்மதியாக தூங்குகிறீர்கள், எத்தனை பேர் இரவு தூக்கம் வராமல் தவிக்கிறீர்கள், காலை அலுவலகத்திற்கு செல்லும் போது, வியாபாரத்திற்கு சென்று கடையில் உட்காரும்போது, தூங்கி விழுகிறீர்கள்.

- Advertisement -

மூதேவி பகலில் உங்களை வந்து பிடித்துக் கொண்டால், ஸ்ரீதேவி எப்படி பிறகு உங்களிடம் வருவாள். இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு தீர்வு தர மேலே சொல்லப்பட்டிருக்கும் இறை வழிபாடு மட்டும்தான் ஒரு எளிமையான தீர்வு. உங்களுக்கு எல்லாம் இந்த விஷயம் தெரிந்திருக்கும். ஆனால் இதை எத்தனை பேர் பின்பற்றுகிறீர்கள் என்று கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: தினம் தினம் பணம் தரும் பைரவர் வழிபாடு

படிக்கும் மற்றவர்களுக்கும் அது உதாரணமாக இருக்கட்டும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு நல்ல தூக்கம் பரிசாக கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்