இரவு தூங்கும் போது நடுராத்திரியில் திடீரென்று விழிப்பு வருவதற்கு இதுவா காரணம்? பயம் உள்ளவர்கள் இந்த காரணத்தை தெரிஞ்சுக்க வேண்டாம்.

sleepless
- Advertisement -

சுவாரசிய தகவல் 1:
சிட்னியில் இருந்து டோக்கியோவுக்கு புறப்பட்ட ஒரு விமானத்தில் யாருக்கும் தெரியாமல் காசு செலவு இல்லாமல் விமானத்தின் வெளியே இருக்கக்கூடிய டயருக்கு மேலே அமர்ந்து பயணம் செய்து விடலாம் என்று, ஒருவர் விமானத்தின் வெளிப்பக்கத்தில் பயணம் செய்துள்ளார். இவர் செய்த முட்டாள்தனம் அவருடைய உயிரையே வாங்கிவிட்டது. ஃபிளைட் டாய்லெட்டில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்யலாம் என்ற காமெடி போல, இவர் செய்த இந்த விபரீத விளையாட்டு, இவருடைய உயிரை எடுத்து விட்டது. விமானத்தின் வெளிப்பக்கத்தில் டயரில் அமர்ந்திருந்த இவரால் அதிக காற்று வேகத்தை தாங்க முடியாமல் கீழே விழுந்து விட்டார். இந்த புகைப்படத்தினை எதிர்பாராத சமயத்தில் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த முட்டாள்தனத்தை யாரும் ட்ரை பண்ணி பாக்காதீங்க.

flight

சுவாரசிய தகவல் 2:
இந்தியாவிலும் மற்ற பிற நாடுகளிலும் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, பெப்பர் ஸ்பிரே, சில்லி ஸ்ப்ரே, ஊசி போன்ற இப்படிப்பட்ட பொருட்களை தான் தங்களுடைய கையில் வைத்திருப்பார்கள். ஆனால் இஸ்ரேல் நாட்டில் மட்டும் பெண்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக துப்பாக்கியை, தங்களுடைய கையில் வைத்திருப்பார்களாம். அதுவும் லைசன்ஸ் உடன்.

- Advertisement -

சுவாரசிய தகவல் 3:
கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பது என்ன. காய்ந்த இலையா. இல்லை, dead leaf என்று சொல்லப்படும் ஒரு வகையான பட்டாம்பூச்சி இது. இதோட இறக்கைகள் பார்ப்பதற்கு காய்ந்த இலைகள் போலவே இருக்கும். ஆனால் இவை உயிருள்ள பட்டாம்பூச்சிகள். இதை நீங்கள் எங்காவது பார்த்துள்ளீர்களா.

butterfly

சுவாரசிய தகவல் 4:
தூக்கத்தைப் பற்றியும், ஆராய்ச்சி செய்பவர்கள் சொல்லுகின்ற தகவல் இது. தினமும் நீங்கள் தூங்கும் போது இரவு 2 மணியிலிருந்து 3 மணிக்குள் திடீரென்று விழிப்பு ஏற்பட்டால், அதற்குக் காரணம் என்ன தெரியுமா. உங்களை நீண்ட நேரமாக யாரோ ஒருவர் உற்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அர்த்தம். உங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது மனிதர்கள் ஆகவும் இருக்கலாம் அல்லது பேய் பிசாசு களாகவும் இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் இது. இரவு திடீரென்று கண் விழிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இது மட்டுமே காரணம் அல்ல. இதற்காக எல்லோரும் இதை நினைத்து பயப்பட வேண்டாம்.

- Advertisement -

சுவாரசிய தகவல் 5:
ட்ரெயினில் சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்தக் கயிறை பிடித்து இழுத்தால், ட்ரெயின் நின்று விடும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். யாராவது அதை பிடித்து இழுத்து இருக்கிறீர்களா. நீங்கள் அந்த சங்கிலியை இழுத்த உடன் ட்ரெயின் நின்று உள்ளதா. அந்த சிவப்பு சங்கிலியை பிடித்து இழுத்தவுடன் டிரெயின் தானாக நிற்காது. ட்ரெயினை இயக்கும் ஓட்டுனருக்கு அலாரம் சத்தம் கேட்கும். இந்த சத்தத்தை கேட்ட எஞ்சின் டிரைவர் தான் ட்ரெயினை மெதுவாக நிறுத்துவார். சங்கிலியை பிடித்து இழுப்பதற்கும் ட்ரெயின் நிற்பதற்கும் இதுதான் சம்பந்தமே தவிர, அந்த இரும்பு சங்கிலியை இழுப்பதால் ட்ரெயின் தானாகவே பிரேக் போட்டு நின்றுவிடும் என்பது அர்த்தம் கிடையாது.

sleepless

சுவாரசிய தகவல் 6:
யாராவது நம்மகிட்ட பேசும்போது சிலசமயம் அடிக்கடி மூக்கை தடவுவார்கள். இப்படி மூக்கை தடவும் அந்த நபர், நம்முடன் பேச கொஞ்சம் சங்கடப் படுகின்றார் என்பதை குறிக்கின்றது. ஆங்கிலத்தில் இதை nervous என்று சொல்லுவார்கள். அதோடு மட்டுமல்லாமல் நம்மைப் பற்றி எதிரில் இருப்பவர்கள் என்ன நினைக்கின்றார்களோ என்ற ஒரு விதமான எண்ணம் அவர்களுடைய மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்கள் முன்னால் யாராவது பேசும் போது இப்படி மூக்கை தடவிக்கொண்டே பேசினால் இனிமே எதிராளி உங்களுடன் பேச சங்கட படுகின்றார் என்பதை நீங்க கண்டு பிடிச்சுடலாம்.

- Advertisement -