இனி குறைந்த செலவில் மிக எளிதாக திருப்பதி செல்லலாம். IRCTC புதிய சேவை

tirupati
- Advertisement -

தினம் தோறும் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேசவஸ்தானமும் அரசும் பலவேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்தியன் ரெயில்வேஸ் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் (ஐ.ஆர்.சி.டி.சி) தெய்வீக பாலாஜி தரிசனம் என்ற பெயரில் ஒரு புதிய பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் மூலம் இனி திருப்பதி ஏழுமலை பக்தர்கள் மிக சுலபமாகவும், குறைந்த கட்டணத்திலும் தரிசனம் செய்யலாம்.

perumal

இதில் நபர் ஒன்றுக்கு ரூபாய். 1147 மட்டுமே செலவாகும். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?? ஆம். இனி எந்த சிக்கலும் இன்றி சுலபமாக நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பனர்களுடன், நண்பர்களுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கலாம். இதற்கான பிரத்யேகமான ரயில்கள் காலை 8.30 மணி முதலே புறப்பட தொடங்கி விடும். இந்த ரயில்களை நீங்கள் ஆன்லைனில் புக் செய்தால் போதும்.
ரயில் எண்கள் 12643/12645/16734/17488/16688/17429/12734.

- Advertisement -

பொதுவாகவே திருப்பதி செல்லும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க சில உடை கட்டுப்பாடுகள் உள்ளன. அதன் படி ஐ.ஆர்.சி.டி.சி கூறியுள்ளது யாதெனில், ஆண்களுக்கு வெள்ளை வேட்டி மற்றும் சட்டை அல்லது குர்தா மற்றும் பைஜாமா, பெண்களுக்கு சேலை அல்லது சல்வார் கமீஸ் அணிய வேண்டும்.  டி-ஷர்ட், ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிய தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. டி.டி.டி நிர்வாகம்  உங்களை தரிசனம் செய்ய  அனுமதிக்காது. ஆகையால் அடையாள அட்டை அவசியம் என்று பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி அறிவுறுத்தி உள்ளது.

tirupati train

அணைத்து வளங்களையும் அள்ளித்தரும் திருப்பதி பெருமாளை தரிசிக்க தயராக உள்ள பயணிகள் உடனே ஐ.ஆர்சி.டி.சி தளத்திற்கு சென்று டிக்கெட்டை புக் செய்து உங்களுடைய ஆன்மீக பயணத்தை இனிதே தொடங்குங்கள்.

- Advertisement -