உங்கள் வீட்டுச் செடியில் இலைகள் பழுத்து விடுகிறதா? அப்படின்னா இந்த தண்ணீர் ஊத்தி பாருங்க! இலைகள், மொட்டுகள் கருகாமல் பசுமையான நிறைய பூக்கள் பூக்கும்.

ilai-karugal-aani

உங்கள் வீட்டில் நீங்கள் வளர்க்கும் பூச்செடிகள், காய்கறி செடிகள், கனி தரக்கூடிய தாவரங்கள் என்று நீங்கள் எதை வளர்த்தாலும் அதற்குரிய ஊட்டச்சத்துகளை சரியாக கொடுத்தால் தான் அது பன்மடங்கு வளர்ச்சியுற்று பூக்களையும், காய் கனிகளையும் நமக்கு வாரி வழங்கும். ஒவ்வொரு செடி வகைக்கும் ஒவ்வொரு விதமான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படும். அதிலும் குறிப்பாக இலைகள் பழுக்காமல் இருப்பதற்கு இரும்புச்சத்து தேவைப்படும். அதற்கு எளிமையான இந்த 1 டிப்ஸை பயன்படுத்தி பாருங்கள். அதைப் பற்றிய தகவல்களை தொடர்ந்து பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ilai-karugal

ஆசை ஆசையாக நீங்கள் வளர்க்கும் செடியில் துளிர் விடும் இலைகள், வளர்ந்த பின் அதிவேகமாக பழுத்து அல்லது கருகி போய் கொட்டி விடுகிறது போன்ற பிரச்சனைகளை மிக எளிதான முறையில் நாம் தீர்த்து விட முடியும். சிறிய சிறிய செடிகளில் சரியான ஊட்டச்சத்து இல்லாமல் இவ்வாறு இலைகள் பழுத்து கருகிப் போய் விடுகின்றன.

இதனால் அதில் வளரும் மொட்டுக்களும், வளர்ச்சியுறாமல் கொட்டி விடுகின்றன. இதற்குத் தேவையான இரும்பு சத்து கொடுத்தால் நன்கு செழிப்பாக வளரும். இலைகள் பழுக்காமல், பசுமையான இலைகளை தரும். அதில் வளரும் பூக்களும், காய்கறிகளும் கூட சத்து மிகுந்து பலமாக இருக்கும். இதற்கு உங்களிடம் 4, 5 ஆணிகள் இருந்தால் போதும். அதை வைத்து என்ன செய்வது? என்பதை தெரிந்து கொள்வோம்.

iron-nail-aani

உங்களிடம் இருக்கும் துருபிடித்த நான்கு முதல் ஐந்து வரையிலான எண்ணிக்கையில் ஆணிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஆணி சிறிதாக இருந்தாலே போதும். அந்த ஆணிகளை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அந்த தண்ணீரில் இரும்பில் இருக்கும் சத்துக்கள் கரைந்து ஈர்த்துக் கொண்டிருக்கும். இப்போது இந்த தண்ணீரில் இரும்பு சத்து நிறைந்து இருக்கும். செடி கொடிகளுக்கு தேவையான இரும்பு சத்து இதன் மூலமே அதற்கு கிடைக்கப் பெற்று விடும்.

- Advertisement -

எனவே இந்த தண்ணீரை வாரம் ஒரு முறை உங்கள் வீட்டுச் செடி கொடிகளுக்கு ஊற்றி வளர்த்து வந்தால் செடிகளுக்கு இரும்புச்சத்து கிடைக்கப் பெறும். மனிதனுக்கு இரும்பு சத்து எவ்வளவு முக்கியமோ! அதே அளவிற்கு செடிகளுக்கும் இரும்பு சத்து அவசியம் தேவைப்படுகிறது.

flower-garden

இரும்பு சத்து இல்லாத காரணத்தினால் இலைகள் பழுத்து கருகி போய் விடுகின்றன. இதற்காக தனியாக உரம் எதுவும் தேவைப்படுவதில்லை. இந்த முறையை பின்பற்றி வாரம் ஒரு முறை இதை செய்து வந்தாலே போதும். செடி, கொடிகளுக்கு தேவையான இரும்பு சத்து கிடைத்து விடும்.

gardening

எப்பொழுதுமே எந்த ஒரு ஊட்டச்சத்தையும் நாம் தினமும் அதற்கு கொடுக்க கூடாது. அதிக ஊட்டச்சத்துக்களை கொடுத்தாலும் ஆபத்து தான். வாரம் ஒரு முறை ஊட்டச்சத்து கொடுத்து தினமும் தேவையான தண்ணீரை தெளித்து வந்தாலே போதும். செடிகள் செழிப்பாக, பச்சை பசேலென பசுமையாக வளரத் துவங்கி விடும். அது போல் மண்ணில் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்கு ஊற்றக் கூடாது. ஈரப்பதம் எப்போதும் இருந்தால் மட்டும் போதும். மண் உதிரியாக காற்றோட்டம் வேருக்கு செல்வது போலவும், எப்போதும் ஈரப்பததுடன் இருப்பதும் நல்ல வளர்ச்சிக்கு சான்றாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
நித்திய மல்லி, மல்லி, முல்லை, ரோஜா போன்ற பூச்செடிகள் அதிக பூக்கள் தருவதற்கு இந்த 2 பொருட்களை பயன்படுத்தினால் போதுமே!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.